Last Updated : 11 Aug, 2020 08:46 PM

 

Published : 11 Aug 2020 08:46 PM
Last Updated : 11 Aug 2020 08:46 PM

சடக் 2-வை வெளியிடும் ஓடிடி தளத்தை புறக்கணிப்போம்: தொடரும் நெட்டிசன்களின் வாரிசு அரசியல் எதிர்ப்பு

இயக்குநர் மகேஷ் பட் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'சடக் 2' திரைப்படத்தை வாங்கி வெளியிடவுள்ள டிஸ்னி+ஹாட்ஸ்டார் ஓடிடி இணையதளத்தைப் புறக்கணிக்க வேண்டும் என்று சமூக ஊடகங்களில் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் 14-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலை முடிவுக்கு பாலிவுட்டில் இருக்கும் அதிகார வர்க்கமும், வாரிசு அரசியலும் முக்கியமான காரணங்கள் என பரவலாகப் பேசப்பட்டது. தொடர்ந்து கரண் ஜோஹர், அலியா பட் உள்ளிட்ட பாலிவுட் வாரிசுகளைக் குறிவைத்து, தாக்கிப் பேசி இணையத்தில் பலர் கொந்தளிக்க ஆரம்பித்தனர். மேலும் கரண் ஜோஹரின் படங்களைப் புறக்கணிப்போம் என்று தனியாக ஹேஷ்டேக் உருவாக்கி ட்ரெண்ட் செய்ய ஆரம்பித்தனர்.

அதன் தொடர்ச்சியாக, தற்போது, மகேஷ் பட் இயக்கத்தில், அவரது மகள்கள் அலியா பட், பூஜ பட் நடித்திருக்கும் 'சடக் 2' படத்தைப் புறக்கணிக்க வேண்டும் என்ற குரல்களும் எழ ஆரம்பித்துள்ளன. படத்தை வாங்கி வெளியிடும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி செயலியை அனைவரும் தங்கள் கருவிகளிலிருந்து நீக்கி எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் பதிவிட ஆரம்பித்துள்ளனர்.

#UninstallHotstar என்ற ஹேஷ்டேக், திங்கட்கிழமை அன்று ட்விட்டரில் ட்ரெண்ட் ஆக ஆரம்பித்தது. மகேஷ் பட்டின் குடும்ப திரைப்படம், வாரிசு அரசியலுக்கான முகவரி, என்று குற்றம்சாட்டிய பதிவுகளையும் பார்க்க முடிந்தது.

தங்கள் படங்களை வெளியிட வேறெந்த இடமும் இல்லை என்பதால் ஹாட்ஸ்டாரை தேர்ந்தெடுத்துள்ளனர். அவர்களுக்குப் பாடம் கற்பிப்போம், நாம் அனைவரும் சுஷாந்துக்கு நீதி பெற்றுத் தருவோம், என பலதரப்பட்ட கருத்துகள் பகிரப்பட்டன.

மேலும், சுஷாந்தின் காதலி ரியாவுடனான மகேஷ் பட்டின் நெருக்கம் குறித்தும் சிலர் விவாதித்து வந்தனர். சுஷாந்தை தற்கொலைக்குத் தூண்டியதாக ரியா சக்ரபர்த்தி மீது சுஷாந்தின் தனதை கேகே சிங் புகாரளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x