Published : 07 Aug 2020 08:06 PM
Last Updated : 07 Aug 2020 08:06 PM
பாரதிராஜா தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய தயாரிப்பாளர் சங்கத்துக்கு கமல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தயாரிப்பாளர் சங்கத்துக்குத் தேர்தல் நடக்கவிருந்த சூழ்நிலையில், பல்வேறு பிரச்சினைகள் காரணமாக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு உயர் நீதிமன்றத் தலையீட்டின் பேரில் சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். விரைவில் தயாரிப்பாளர் சங்கத்துக்குத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்தச் சூழலில் தற்போது படம் தயாரிப்பவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து புதிய சங்கம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இதில் தலைவராக பாரதிராஜா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். டி.சிவா செயலாளராகவும், பொருளாளராக சத்யஜோதி தியாகராஜனும் செயல்படவுள்ளனர். இந்தப் புதிய சங்கம் குறித்த அறிவிப்பு தமிழ்த் திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தயாரிப்பாளர்கள் தாணு, முரளி, கே.ராஜன், கமீலா நாசர் உள்ளிட்ட பலர் பத்திரிகையாளர்களைச் சந்தித்து, இந்த முடிவை பாரதிராஜா கைவிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்கள். இதனிடையே, இந்தப் புதிய தயாரிப்பாளர் சங்கத்துக்குக் கமல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கமல் வாழ்த்து தொடர்பாக பாரதிராஜா தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"முடக்கத்தை உடைத்து முயற்சி எடுக்கையில் முன்னேரின் கமல்ஹாசன் வழிமொழிதல் அகமகிழ்வைத் தருகிறது. மூத்ததொரு கலைஞனின் "தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம்" காலத்தின் தேவையென்ற புரிதல்போல தமிழ் சினிமாவின் ஆரோக்கியத்திற்காக 'நம்' தொடக்கம் போராடி நிரூபிக்கும் நன்றிகள்".
இவ்வாறு பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
முடக்கத்தையுடைத்து முயற்சியெடுக்கையில் முன்னேரின் @ikamalhaasan
வழிமொழிதல் அகமகிழ்வைத் தருகிறது.மூத்ததொரு கலைஞனின் "தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம்" காலத்தின் தேவையென்ற புரிதல் போல தமிழ் சினிமாவின் ஆரோக்கியத்திற்காக 'நம்' தொடக்கம்போராடி நிரூபிக்கும்
நன்றிகள்.@tfapatn
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT