Published : 05 Aug 2020 03:15 PM
Last Updated : 05 Aug 2020 03:15 PM
கரோனா கால இடைவெளிக்குப் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பாகத் தொடங்கியுள்ள 'கல்யாண வீடு' சீரியலில் புதிய நாயகியாக கன்னிகா ரவி நடிக்கத் தொடங்கியுள்ளார்.
'சாட்டை 2', 'ராஜ வம்சம்' என திரைப்படங்களில் நடித்த இவர் சன் டிவியின் பிரைம் டைம் சீரியலுக்குள் நாயகியாகப் பொறுப்பேற்றிருக்கிறார்.
''ரெண்டரை வருஷம் முன்னாடி இந்த சீரியல் ஒளிபரப்பாகத் தொடங்கின அந்த நேரத்துலயே எனக்கு இதுல நாயகியாக நடிக்க வாய்ப்பு வந்தது. அப்போ சினிமா பக்கம் ட்ராவலிங்ல இருந்ததால நடிக்க முடியாமப் போச்சு. இப்போ திரும்பவும் அதேமாதிரி ஒரு வாய்ப்பு வரும்போது அதை ஏன் நழுவ விடணும்னு கெட்டியா பிடிச்சுக்கிட்டேன்.
அதோட, இதுக்கு முன் இந்த சீரியலில் பெங்களூரு பொண்ணு ஸ்பூர்த்து கவுடா நாயகியாக நடிச்சிக்கிட்டிருந்தாங்க. அவங்களுக்கு இப்போ மேரேஜ் நிச்சயமாகியிருப்பதால ஷூட்டிங் வர முடியல. திரும்ப நான் இதுல புது நாயகியாக அவதாரம் எடுக்க அதுவும் ஒரு காரணம்.
தொகுப்பாளினி, சீரியல், சினிமான்னு மீடியாவுல எல்லாப் பக்கங்களிலும் நம்ம பங்களிப்பு இருக்கணும்னு எப்பவும் நினைப்பேன். அதுவும் இந்த மாதிரி பிரைம் டைம்ல திருமுருகன் சார் சீரியல்னா விடவா மனசு வரும்.
கரோனா டைமுக்கு முன்ன சீரியல் முழுக்க தஞ்சாவூர்ல ஷூட் ஆகியிருக்கு. இப்போ அப்படியே இடத்தை மாத்தி காரைக்குடி பக்கம் போய்ட்டோம். ஒரு ஷெட்யூல் முடிய கிட்டத்தட்ட 20 நாட்கள் ஆனது. லாக்டவுன் முன்னாடி நாயகியாக நடித்த சூர்யா கதாபாத்திரத்தை மறந்த இப்போ இந்த சூர்யாவை மக்கள் ஏத்துக்க எப்படியும் ஒரு மாதம் ஆகும். கன்டிப்பா எல்லார் மனசுலயும் பெரிய இடம் பிடிப்பேன். அதுக்காக நிறையவே மெனெக்கெடுறேன்.
'மெட்டி ஒலி', 'நாதஸ்வரம்', 'குலதெய்வம்'னு ஹிட் அடித்த திருமுருகன் சார் மாதிரியான அனுபவமிக்க இயக்குநரோட டீம்ல நானும் ஒரு அங்கமா இருப்பது மகிழ்ச்சி.
லாக்டவுன் முன்னாடி கதைக்களம் எப்படி இருந்ததோ அதேதான். அதுல சின்னச் சின்ன மாற்றம் இருக்கும். கதைப்படி கடந்த அத்தியாயங்களில் ஹீரோவுக்குத் திருமணம் ஆன மாதிரி காட்டல. இப்போ எங்களுக்குப் பதிவுத் திருமணம் ஆகியிருக்கு. இனிதான் திருமண வைபவக் காட்சிகள் எல்லாம் வரும். காமெடி, எமோஷன்ஸ், உறவுகளின் உன்னதம்னு திருமுருகன் சாரோட 'எம்டன் மகன்' படம் மாதிரி சீரியல் இருக்கும். அதுக்குத் தகுந்தமாதிரி எங்களோட சீரியல் குழுவும் அவ்வளவு கலகலப்பா அமைந்தது கிஃப்ட்தான்!''.
- கலகலப்பு குறையாமல் முடிக்கிறார், 'கல்யாண வீடு' கன்னிகா ரவி!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment