Published : 05 Aug 2020 12:43 PM
Last Updated : 05 Aug 2020 12:43 PM
50-வது இந்தியத் திரைப்பட விழாவில் பங்கேற்று நல்ல வரவேற்பைப் பெற்ற படம் ‘பரீக்ஷா: தி ஃபைனல் டெஸ்ட்’. இந்தியக் கல்வி முறை குறித்து பேசிய இப்படத்தில் ஆதில் ஹுசைன் நடித்திருந்தார். இப்படம் நாளை (ஆகஸ்ட் 6) ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
இப்படம் குறித்து ஆதில் ஹுசைன் கூறியிருப்பதாவது:
''நம் நாடு முழுக்க ஏராளமான திறமைசாலிகள் இருக்கிறார்கள் என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அற்புதமான திறமைகளைக் கொண்டவர்களை நான் கண்டிருக்கிறேன். பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கியுள்ள குழந்தைகளுக்கு கல்வியில் சம உரிமைகளை வழங்குவது இந்த அரசின் கடமை.
கூகுள் சிஇஓ முதல் நாசா விஞ்ஞானிகள் வரை பல இந்தியர்கள் அங்கீகாரத்துக்காக வெளிநாடுகளை நாடிச் செல்வது அவமானகரமான ஒரு விஷயம். இது மாறும் என்று நம்புகிறேன். நம் நாட்டில் இருக்கும் திறமைசாலிகளுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்க வேண்டும் என்ற விழிப்புணர்வை எங்கள் படம் ‘பரீக்ஷா’ ஏற்படுத்துகிறது''.
இவ்வாறு ஆதில் ஹுசைன் கூறியுள்ளார்.
உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட ‘பரீக்ஷா: தி ஃபைனல் டெஸ்ட்’ திரைப்படத்தை பிரகாஷ் ஜா இயக்கியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT