Published : 28 Jul 2020 02:49 PM
Last Updated : 28 Jul 2020 02:49 PM
என் கலைவாழ்வில் ஒவ்வொரு நாளும் நினைக்கும் பெயர் ஏ.வி.மெய்யப்பன் என்று கமல் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்
தமிழ்த் திரையுலகில் பழம்பெரும் தயாரிப்பு நிறுவனமாக வலம் வருவது ஏ.வி.எம். இந்நிறுவனத்தை 1945-ம் ஆண்டு அக்டோபர் 14-ம் தேதி தொடங்கினார் ஏ.வி.மெய்யப்பன். இன்று (ஜூலை 28) அவருடைய 113-வது பிறந்த நாளாகும்.
இவர் தொடங்கிய ஏவிஎம் நிறுவனத்தின் மூலம் உருவான பிரபலமானவர்களின் பட்டியல் என்பது மிகவும் பெரியது. 75 ஆண்டுகளைக் கடந்து 175 படங்களுக்கு மேல் தயாரித்துள்ளது ஏ.வி.எம் நிறுவனம்.
தற்போது ஏ.வி.மெய்யப்பனின் பிறந்த நாளை முன்னிட்டு கமல் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"என் மேல் வெளிச்சம் பாய்ச்சி, என் கலையுலகக் கதவுகளைத் திறந்த பன்முகத் திறமையாளரும், பல கனவுகளின் முகவரியுமான ஏ.வி.எம் தயாரிப்பு நிறுவனத்தின் தந்தை ஏ.வி.மெய்யப்பனின் பிறந்த தினத்தில் மட்டுமல்ல, என் கலைவாழ்வின் ஒவ்வொரு நாளும் அவரை நினைத்துக் கொண்டிருக்கிறேன்".
இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.
என் மேல் வெளிச்சம் பாய்ச்சி, என் கலையுலகக் கதவுகளைத் திறந்த பன்முகத் திறமையாளரும், பல கனவுகளின் முகவரியுமான AVM தயாரிப்பு நிறுவனத்தின் தந்தை திரு AV.மெய்யப்பன் அவர்களின் பிறந்த தினத்தில் மட்டுமல்ல, என் கலைவாழ்வின் ஒவ்வொரு நாளும் அவரை நினைத்துக் கொண்டிருக்கிறேன். @ProductionsAvm
— Kamal Haasan (@ikamalhaasan) July 28, 2020
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT