Published : 15 Jul 2020 12:48 PM
Last Updated : 15 Jul 2020 12:48 PM
அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட் ஒரு காவல்துறை அதிகாரியால் கொல்லப்பட்டதை எதிர்த்து நாடு தழுவிய போராட்டம் நடைபெற்றது.
உலக அளவில் பல்வேறு நாடுகளில் கறுப்பின மக்கள் இதற்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். blacklivesmatter என்ற இயக்கத்தின் கீழ் இந்தப் போராட்டங்கள் நடைபெற்றன.
ஹாலிவுட் சினிமாக்களில் கறுப்பின மக்களுக்கு எதிரான போக்கைக் கொண்ட திரைப்படங்கள் கடும் விமர்சனத்துக்கு ஆளாயின. நெட்ஃப்ளிக்ஸ் உள்ளிட்ட ஓடிடி தளங்களில் இருந்த அத்தகைய படங்கள் மற்றும் வெப் சிரீஸ்கள் நீக்கப்பட்டன.
இந்நிலையில் இதுகுறித்து பிரபல ஹாலிவுட் நடிகர் இத்ரிஸ் எல்பா கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், ''கருத்துச் சுதந்திரத்தில் நான் மிகுந்த நம்பிக்கை கொண்டவன். ஆனால், அவமதிக்கும் கருத்துகளைக் கொண்ட பழைய படங்களுக்கு பார்வையாளர்களை எச்சரிக்கும் மதிப்பீட்டு முறை இருக்க வேண்டும்.
உண்மையைக் கிண்டல் செய்யாமல் அதைத் தெரிந்துகொள்ள முற்பட வேண்டும். ஆனால், இனவெறி கருத்துகள் கொண்ட படங்களைத் தணிக்கை செய்வது குறித்த விஷயத்தில் மக்கள் அதுபோன்ற படங்களை உருவாக்கும் மனிதர்களைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும்.
தணிக்கை முறையில் எனக்கு நம்பிக்கை இல்லை. நாம் சொல்ல விரும்பும் கருத்துகளை நாம் தைரியமாக சொல்ல அனுமதிக்கப்பட வேண்டும். ஏனெனில் நாம் எல்லாரும் கதை சொல்லிகள்தானே'' என்று இத்ரிஸ் எல்பா தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT