Published : 14 Jul 2020 11:40 AM
Last Updated : 14 Jul 2020 11:40 AM
அமெரிக்காவைச் சேர்ந்தவர் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜான் ட்ரவோல்டா. ‘பல்ப் ஃபிக்ஷன்’, ‘ஃபேஸ் ஆஃப்’, ‘ஸ்வார்ட்ஃபிஷ்’ உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். ‘கெட் ஷார்ட்லி’ படத்துக்காகச் சிறந்த நடிகருக்கான கோல்டன் குளோப் உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.
இவரது மனைவி நடிகை கெல்லி ப்ரெஸ்டன். ‘ட்வின்ஸ்’, ‘அடிக்டட் டு லவ்’, ‘ஸ்கை ஹை’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இது தவிர ஏராளமான தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக மார்பகப் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த கெல்லி, கடந்த ஞாயிறு அன்று உயிரிழந்துள்ளார். இதை ஜான் ட்ரவோல்டா நேற்று (14.07.20) தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.
இதுகுறித்து ஜான் ட்ரவோல்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
''மார்பகப் புற்றுநோயுடன் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் போராடி வந்த எனது மனைவி கெல்லி மறைந்துவிட்டார். பலரது அன்பாலும் ஆதரவாலும் அவர் புற்றுநோயை எதிர்த்து துணிச்சலுடன் போராடினார். கெல்லியின் அன்பும், வாழ்வும் என்றென்றும் நினைவு கூரப்படும்.
தாயை இழந்து தவிக்கும் என்னுடைய குழந்தைகளுடன் சில காலம் இருக்கப் போகிறேன். எனவே என்னிடமிருந்து உங்களுக்குத் தகவல்கள் வராது என்பதற்காக முன்கூட்டியே மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். ஆனால், வரவிருக்கும் வாரங்கள், மாதங்கள் முழுக்க நீங்கள் பொழியும் அன்பை நான் உணர்வேன்''.
இவ்வாறு ஜான் ட்ரவோல்டா கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT