Published : 03 Jul 2020 10:09 PM
Last Updated : 03 Jul 2020 10:09 PM

விஜய் ஸ்ரீ - சாருஹாசன் இணையும் தாதா 87 - 2.0

சென்னை

விஜய் ஸ்ரீ இயக்கத்தில் சாருஹாசன் நடித்து வரும் படத்துக்கு 'தாதா 87 - 2.0' என்று பெயரிட்டுள்ளது படக்குழு.

விஜய் ஸ்ரீ இயக்கத்தில் சாருஹாசன் இயக்கத்தில் வெளியான படம் 'தாதா 87'. இந்தப் படத்துக்கு போதிய வரவேற்பு பெறவில்லை. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் மட்டுமே சாருஹாசன் நடித்திருந்தார்.

தற்போது சாருஹாசனை நாயகனாக வைத்து புதிய படமொன்றை இயக்கியுள்ளார் விஜய் ஸ்ரீ. பலரும் சாருஹாசனை மட்டுமே வைத்து ஏன் ஒரு முழுநீள தாதா படமாக உருவாக்கக் கூடாது என கேட்டுக் கொண்டதால் இந்தப் படத்தை இயக்கியுள்ளதாக இயக்குநர் விஜய் ஸ்ரீ குறிப்பிட்டுள்ளார்.

பலம் என்பது உடல் வலிமையை மட்டும் வைத்து முடிவு செய்யப்படுவதில்லை, அது மூளையையும் வைத்து முடிவு செய்யப்படுவது. சத்ரியனாக இருப்பது மட்டும் முக்கியமல்ல சாணக்கியனாகவும் இருக்க வேண்டும்‌ என்ற கருத்தை முன்வைத்து இந்தப் படம் உருவாகிறது.

உள்ளூரில் சாமானியனாகத் தாதாவாக இருக்கும் ஒருவர் தன் புத்தியின் பலத்தை கொண்டு உலக அரங்கில் தவிர்க்க முடியாத இடத்தை எவ்வாறு பிடித்து முதன்மை இடத்தை அடைகிறார் என்பதே 'தாதா 87 - 2.0' படத்தின் கதையாகும்.

முன்னணி நடிகர், நடிகையினர் மற்றும் மக்கள் மனதில் இடம்பெற்ற பழம்பெரும் நடிகர், நடிகையினர் இதில் நடிக்கவுள்ளனர். கரோனா ஊரடங்கிற்கு முன்பு 'தாதா 87- 2.0' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு 7 நாட்கள் நடைபெற்றது. சாருஹாசன், மைம் கோபி மற்றும் கூத்துப்பட்டறையைச் சேர்ந்த பலர் நடித்த முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டது.

கரோனா ஊரடங்கிற்கு பின் அரசின் கட்டுப்பாடுகளோடு தேவையான படக்குழுவினரோடு சென்னை, கேரளா மற்றும் கோவாவில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. 'தாதா 87', 'பொல்லாத உலகில் பயங்கர கேம்' படத்திற்கு பின் இசையமைப்பாளர் லியாண்டர் லீ மார்ட்டி மூன்றாம் முறையாக மீண்டும் விஜய் ஸ்ரீ யுடன் இப்படத்தில் இணைகிறார். ஒளிப்பதிவாளராக கோபி பணிபுரிந்து வருகிறார்.

'தாதா 87 - 2.0' படத்துக்கு முன்பாக 'பொல்லாத உலகில் பயங்கர கேம் (PUBG)' படத்தை இயக்கி முடித்துள்ளார் விஜய் ஸ்ரீ. இதன் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x