Last Updated : 24 Jun, 2020 07:46 PM

1  

Published : 24 Jun 2020 07:46 PM
Last Updated : 24 Jun 2020 07:46 PM

’’அஜித், விஜய் ஜெயிச்சது இப்படித்தான்!’’ - சாந்தனுவிடம் பாக்யராஜ் விளக்கம் 

’டேட் சன் கிரியேஷன்ஸ் என்ற பெயரில் நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜை, அவரின் மகன் சாந்தனு பேட்டி எடுத்தார்.

அந்தப் பேட்டியில் சாந்தனு கேட்ட கேள்விகளும் பாக்யராஜ் அளித்த பதில்களும் :

‘‘அப்பாகிட்ட கேள்வி ஏதாவது இருந்தா அனுப்புங்கன்னு ட்வீட் போட்டேன். அதுல நிறைய பேர் கேள்விகள் அனுப்பிச்சிருக்காங்க. அந்தக் கேள்விகளைத்தான் இப்போ கேக்கப் போறேன்’ என்றார் சாந்தனு.

’’அப்பா... தளபதி விஜய், தல அஜித்... இவங்களைப் பத்தி சொல்லுங்கப்பா?’’

‘’பின்புலம்... நல்ல பின்புலம் இருந்தது. இருந்தாலும் தன் பலம்ங்கறதை வைச்சு, மிகப்பெரிய லெவலுக்கு வந்திருக்கிறவர் தளபதி விஜய்.

தன் பலத்தை மட்டுமே பின்பலமா வைச்சிக்கிட்டு, பல போராட்டங்களைச் சந்திச்சிட்டு, மிகப்பெரிய உச்சத்துல ஜெயிச்சிருக்கிறவர் தல அஜித்.

ரெண்டுபேருமே, ஜெயிச்சு, மிகப்பெரிய அளவுக்கு முன்னேறியிருக்காங்க. அவரோட பெர்ஃபாமன்ஸ், ஆக்டிங்லாம் வேற. இவரோட பெர்ஃபாமன்ஸ், ஆக்டிங்லாம் வேற. ரெண்டுபேரும் வெற்றிக்கொடி நாட்டிட்டு உயர்ந்த இடத்துல இருக்காங்க.

அடுத்த கேள்வி... இப்போ சுஷாந்த் சிங் மரணம். ’நெப்போடிஸம்’ பத்தித்தான் இந்தியா முழுவதும் பேசுறாங்க. ரியல் டேலண்ட் இருந்தா ஒடுக்குறாங்க. ’பேக் கிரவுண்ட்’ இருக்கிற ஆர்ட்டிஸ்ட், ‘பேக் கிர்வுண்ட்’ இருக்கிற டெக்னீஷியன்ஸ் அதாவது வாரிசு நடிகர்கள், வாரிசு டெக்னீஷியன்ஸ் இவங்களை மாதிரி இருக்கறவங்களுக்குத்தான் வாய்ப்புகள் கிடைக்குது. திறமை இருக்கறவங்களுக்கு வாய்ப்பு கிடைச்சாலும், அது தவிர்க்கப்படுது. இதெல்லாம் ஏன் அப்படீங்கறதுதான் கேள்வி. இதுக்கு ஏதாவது வழிமுறைகள், நெறிமுறைகள் வகுக்கமுடியுமாங்கறதுதான் கேள்வி. ஒரு கிரியேட்டரா, உங்க கருத்து என்ன?

’’முதல்ல... இறந்த கலைஞர் சுஷாந்துக்கு என்னோட ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிச்சுக்கறேன். அவரோட குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் ரசிகர்களுக்கும் இரங்கலைத் தெரிவிச்சுக்கறேன். இதுல நான் என்ன நினைக்கிறேன்னா... சுஷாந்துக்கு கைடு பண்ண ஒரு ஆள் இல்லியோ... அதனாலதான் இப்படி ஆயிருச்சோனு நான் நினைக்கிறேன். ’காய்ச்ச மரம்தான் கல்லடி படும்’னு சொல்லுவாங்க. கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாதுன்னு சொல்லுவாங்க. அதுமாதிரி, ‘டோனி’ங்கறவருக்கு உலக அளவுல எவ்ளோ பெரிய பேரு, புகழ் இருக்கு. அந்த டோனியோட லைஃப் படமாக்கும் போது, அவர் கேரக்டர்ல நடிக்கிறதுக்கு இவருக்கு வாய்ப்பு கிடைச்சுச்சு. இது எவ்ளோ பேருக்கு ஒரு ஃபீலிங்கை ஏற்படுத்தியிருக்கும்.

’அடச்சே... இது நமக்குக் கிடைக்காம போயிருச்சே’ங்கற நினைப்பு எவ்ளோ பேருக்கு வந்திருக்கும்? ’இப்படியொரு நேரம் கிடைச்சிருக்கே?’ன்னெல்லாம் எல்லாருக்குமே தோணும். சிலபேர் சாதாரணமா எடுத்துக்குவாங்க. யார் எப்படி எடுத்துக்குவாங்கன்னு சொல்லமுடியாது.

சுஷாந்த் என்ன நினைச்சிருக்கணும்னா... ’இப்படியொரு வாய்ப்பு நமக்குக் கிடைச்சிருக்குன்னும் போது, எல்லார் பார்வையும் நம்ம மேல விழும். நிறைய கண்ணடி படுறதுக்கான வாய்ப்பு வரும். நிறைய நல்லதும் வரும், கெட்டதும் வரும். இதெல்லாம் நாம தெரிஞ்சிக்கணும். ஜீரணம் பண்ணிக்கணும். ஃபேஸ் பண்ணனும்னெல்லாம் மனசால தன்னை தயார்படுத்திட்டிருக்கணும். அப்படி தயாராகியிருந்தா, எல்லாத்தையும் ‘இக்னோர்’ பண்ணிட்டுப் போயிருப்பார். கூட இருக்கறவங்களும் சொல்லிக்கிட்டே இருந்தாங்கன்னா... இன்னும் தெம்பாகியிருப்பார்.

அப்படி யாரும் சொல்லாததால, இவரும் மனசளவுல உடைஞ்சிட்டதால இப்படி ஆயிருச்சோனு நினைக்கிறேன்.

பாக்யராஜ் பையன்ங்கறதால வாய்ப்புகள் வர்றது இருக்கும். ஆனா அது நிரந்தரமா இருக்கும்னெல்லாம் சொல்லமுடியாது. அமிதாபச்சன் இன்னிக்கி வரைக்கும் ஒரு வேல்யூ ஆர்ட்டிஸ்டாத்தானே இருக்காரு. அவரோட பையனுக்கு ஆரம்பத்துல வாய்ப்பு தேடுனாரா, கேட்டாரா? அமிதாப் பையன்னு வாய்ப்பு வந்துச்சு. அப்பாவோ, தெரிஞ்சவங்களோ யாராவது ஃபீல்டுல இருந்தா, அவங்க சிபாரிசு பண்றது சகஜம்.

ஜாதிக்காரன்னு சப்போர்ட் பண்றவன் இருக்கான். ஊர்க்காரன்னு ஹெல்ப் பண்றவன் இருக்கான். ’இவன் நம்மாளுப்பா’ன்னு சொல்லி உதவி பண்ணுவாங்க. இதெல்லாம் சினிமால யதார்த்தமா இருக்கக்கூடியதுதான். இதையெல்லாம் தாண்டி வரணும். ஃபேஸ் பண்ண தயாரா இருக்கணும்.

எங்க டைரக்டர் (பாரதிராஜா) பையன் போராட்டிருக்காரு. நீயும் அப்படித்தான் முயற்சி பண்ணிக்கிட்டே இருக்கே. ஒரு ஃபோர்ஸ் பண்ணி கொண்டாந்துட முடியும்ங்கறதெல்லாம் சாத்தியம் இல்ல. அவங்கவங்களுக்கு ரியல் டேலண்ட் இருக்கணும். திறமை இருக்கணும். அதுல பேரு வரணும். இதுதான் ரொம்ப ரொம்ப முக்கியம்’’ என்று பதிலளித்தார் பாக்யராஜ்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x