Published : 16 Jun 2020 09:31 PM
Last Updated : 16 Jun 2020 09:31 PM
வீரமரணம் அடைந்த பழனியின் குடும்பத்துக்கு 5 லட்ச ரூபாய் நிதி வழங்குவதாக கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
அப்போது இந்திய வீரர்களுக்கும் சீன ராணுவத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 3 இந்திய ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். சீன ராணுவத்தினர் தரப்பிலும் 5 பேர் கொல்லப்பட்டதாகத் தகவல் தெரிவிக்கிறது.
கிழக்கு லடாக்கில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் நேற்று இரவு இந்திய வீரர்களுக்கும், சீன ராணுவத்தினருக்கும் வீரர்களுக்கு இடையே மோதல் நடந்தது. இதில் இந்திய ராணுவத்தினர் 3 பேர் கொல்லப்பட்டனர். சீன ராணுவத்தினர் தரப்பில் 5 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய ராணுவத்தில் கொல்லப்பட்ட 3 வீரர்களில் ஒருவர் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பழனி என்பது தெரியவந்துள்ளது. பழனிக்கு பத்து வயது மதிக்கத்தக்க மகன் மற்றும் எட்டு வயது மகள் உள்ளனர். மனைவி மற்றும் குழந்தைகள் ராமநாதபுரத்தில் வசித்து வருகின்றனர். பழனியின் வீர மரணம் ராமநாதபுரம் மாவட்டத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பழனியின் உடல் நாளை (ஜூன் 17) காலை 9 மணி முதல் 12 மணிக்குள் உடல் கொண்டு வரப்பட்டு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படவுள்ளது.
பழனியின் மரணம் தொடர்பாக, பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தங்களுடைய ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"உறைய வைக்கும் குளிரில் காவலுக்குப் பசியுடனும், தாகத்துடனும், குளிருடனும் நின்று, தங்கள் குடும்பத்துக்குக் கதைகள் சொல்ல திரும்பி வரமுடியாத மனிதர்களுக்கு... உங்கள் தியாகத்துக்கு தலை வணங்குகிறோம். உங்கள் ஆன்மாக்கள் அமைதி அடையட்டும். தமிழ் வீரன் பழனியில் குடும்பத்துக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்.
அவர் நம்மில் ஒருவர் போன்றவர். அவர் நம் ரணசிங்கம். ஒரு போர்வீரரின் மரணத்தை எந்த பணமும் ஈடு செய்ய முடியாது. ஆனால் இங்கே எங்களால் செய்ய முடிந்த சிறிய உதவி.. பழனியின் தியாகத்துக்காக அவரது குடும்பத்தினருக்கு 5 லட்ச ரூபாய் வழங்குகிறோம். அவரது ஆன்மா அமைதி அடையட்டும்."
இவ்வாறு கே.ஜே.ஆர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போது 'க/பெ.ரணசிங்கம்', 'டாக்டர்', 'அயலான்' உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Our heart goes out to Soldier #Pazhani’s family. He feels one of our own... Our own Ranasingam! No money would equate the death of a warrior. But here’s whatever little we could... We pledge 5 lacs to Pazhani’s family for his mighty sacrifice. May his souls #RIP
— KJR Studios (@kjr_studios) June 16, 2020
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT