Published : 16 Jun 2020 12:25 PM
Last Updated : 16 Jun 2020 12:25 PM
கரோனா பிடியிலிருந்து சென்னை மீளும், வாழும் என்று நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.
கரோனா அச்சுறுத்தல் தொடங்கியதிலிருந்து இப்போது தொற்று எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஆனால், சில நாட்களுக்கு முன்பு ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்தது தமிழக அரசு. மேலும், குறிப்பாக சென்னையில் கரோனா அச்சுறுத்தல் என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
இதனை மனதில் கொண்டு சென்னை அருகிலுள்ள 4 மாவட்டங்களுக்கு ஜூன் 19-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் சில தளர்வுகள் இருந்தாலும், இரண்டு ஞாயிற்றுக்கிழமை எந்தவொரு தளர்வும் இல்லாமல் முழுமையான ஊரடங்கு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா பிடியிலிருக்கும் சென்னை தொடர்பாக நடிகர் விவேக் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"எல்லோரும் கழிவிரக்கம், அச்சமுடன் சென்னையைப் பார்க்கிறார்கள். பரவல் அதிகமாகக் காரணம் இங்கு அதிக மக்கள் குறைந்த இடத்தில் நெருங்கி வாழ்கின்றனர். தலைநகர்! பல மொழி, இனத்தோர் கலந்துள்ளனர். தன்னை வளர்த்தவனுக்கு இளநீர் கொடுப்பது தென்னை; இந்த மண்ணை மிதித்தவனைக் கைவிடாது சென்னை. அது மீளும்; வாழும்!".
இவ்வாறு விவேக் தெரிவித்துள்ளார்.
எல்லோரும் கழிவிரக்கம்,அச்சமுடன் சென்னையை பார்க்கிறார்கள்.பரவல் அதிகமாக காரணம் இங்கு அதிக மக்கள் குறைந்த இடத்தில் நெருங்கி வாழ்கின்றனர்.தலைநகர்!பல மொழி,இனத்தோர் கலந்து உள்ளனர். தன்னை வளர்த்தவனுக்கு இளநீர் கொடுப்பது தென்னை; இந்த மண்ணை மிதித்தவனை கைவிடாது சென்னை.அது மீளும்;வாழும்!
— Vivekh actor (@Actor_Vivek) June 15, 2020
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT