Published : 10 Jun 2020 10:42 AM
Last Updated : 10 Jun 2020 10:42 AM
தமிழ் சினிமாவின் முன்னனி இசையமைப்பாளர்களில் ஒருவர் ஜிப்ரான். ‘வாகை சூட வா’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் ‘திருமணம் என்னும் நிக்காஹ்’, ‘விஸ்வரூபம் 2’ , ‘பாபநாசம்’, ‘உத்தமவில்லன்’, ‘ராட்சசன்’ உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். ‘வாகை சூட வா’, ‘திருமணம் என்னும் நிக்காஹ்’ , ‘ராட்சசன்’ ஆகிய படங்களுக்காக ஏராளமான விருதுகளையும் பெற்றுள்ளார்.
இந்நிலையில் பக்திப் பாடல்கள் கொண்ட ஆல்பம் ஒன்றை ஜிப்ரான் உருவாக்கியுள்ளார். ‘ஜிப்ரானின் ஆன்மீகப் பயணம்’ என்ற பெயர் கொண்ட இந்த ஆல்பத்தில் 6 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த ஆல்பம் வரும் ஜூன் 12ஆம் தேதியன்று வெளியாகிறது.
அந்த ஆல்பம் குறித்து ஜிப்ரான் கூறியிருப்பதாவது:
இந்த நவீன இசை யுகத்தில் இந்த ஆல்பம் தரமாகவும், தெய்வீகத்தன்மையுடனும், இருக்கவேண்டும் என்று விரும்பினேன். அதே சமயத்தில், பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நம் முன்னோர்களால் எழுதப்பட்ட பாடல்களின் நுணுக்கங்களையும், கலாச்சாரத்தை இதில் கொண்டு வர விரும்பினேன்.
இதில் நான் எந்த சமரசமும் செய்யவில்லை. நான் இதற்காக அற்புதமான பாரம்பரிய இசைக் கலைஞர்களோடும், உலகம் முழுவதுமுள்ள ஆர்கெஸ்ட்ராக்கள் மற்றும் இசை மேதைகளோடும் பணிபுரிந்துள்ளேன். இந்த ஆல்பத்தில் ஆறு வெவ்வேறு மொழிகளில் எழுதப்பட்ட பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
இவ்வாறு ஜிப்ரான் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT