Last Updated : 18 May, 2020 11:20 AM

4  

Published : 18 May 2020 11:20 AM
Last Updated : 18 May 2020 11:20 AM

கடைசி புலம்பெயர் தொழிலாளி தன் வீட்டுக்கு செல்லும் வரை அவர்களை அனுப்பிக் கொண்டே இருப்பேன் - சோனு சூட் நெகிழ்ச்சி

கரோனா நெருக்கடியால் கடந்த மார்ச் மாதத்திலிருந்து தேசிய அளவில் ஊரடங்கு அமலில் இருக்கிறது. இதனால் புலம் பெயர்ந்த, மற்ற மாநிலங்களில் தினக்கூலியாகப் பணியாற்றும் தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுப் போக்குவரத்தும் வசதியும் முடங்கியுள்ளதால் இவர்களில் பலர் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

‘சந்திரமுகி’, ஒஸ்தி', 'தேவி', 'அருந்ததி' உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் நடிகர் சோனு சூட், மும்பையிலிருந்து கர்நாடகா செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களுக்காக பேருந்து ஏற்பாடு செய்து அவர்களை தானே முன்னின்று வழியனுப்பியும் வைத்தார்.

இந்நிலையில் தற்போது உத்தரபிரதேசத்தில் சிக்கியுள்ள புலம்பெயர் தொழிலாளர்களுக்காகவும் பேருந்து ஏற்பாடு செய்துள்ளார் சோனு சூட். இதற்காக உ.பி அரசிடம் அனுமதியும் பெற்றுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

என்னை பொறுத்தவரை இது ஒரு உணர்வுப்பூர்வமான பயணம். இந்த தொழிலாளர்கள் தங்கள் வீட்டை விட்டு இப்படி தெருக்களில் அலைந்து திரிவதை பார்க்கையில் மனம் வலிக்கிறது.

கடைசி புலம்பெயர் தொழிலாளி தன் குடும்பத்தோடு சேரும்வரை அவர்களை நான் அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு தொடர்ந்து அனுப்பிக் கொண்டே இருப்பேன். இது என் இதயத்துக்கு நெருக்கமான விஷயமாக உள்ளது. இதற்காக என்னிடம் உள்ள அனைத்தையும் கொடுப்பேன்.

இவ்வாறு சோனு சூட் கூறியுள்ளார்.

ஜூஹூ பகுதியில் இருக்கும் தனது ஹோட்டலை, களப் பணியாளர்கள் பயன்படுத்திக் கொள்ள தானமாக கொடுத்துள்ளார் சோனு. மேலும் சமீபத்தில் பஞ்சாபில் இருக்கும் மருத்துவர்களுக்காக 1,500 பாதுகாப்பு உபகரணங்களைத் தந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x