Last Updated : 09 May, 2020 08:50 PM

 

Published : 09 May 2020 08:50 PM
Last Updated : 09 May 2020 08:50 PM

தற்போதைய சூழலில் விசாகப்பட்டினம் கசிவு குறித்துப் போராட வேண்டாம்: பவன் கல்யாண் வேண்டுகோள்

விசாகபட்டினம் வாயுக் கசிவு குறித்து எந்த அரசியல் கட்சியும் இப்போது தெருவில் இறங்கிப் போராட வேண்டாம் என பிரபல தெலுங்கு நடிகரும், ஜன சேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் கோரியுள்ளார்.

விசாகபட்டினத்தில் இருக்கும் எல்ஜி பாலிமர்ஸ் என்ற நிறுவனத்திலிருந்து நச்சு வாயு கசிந்ததால், அந்த சுற்றுவட்டாரத்தில் இருக்கும் எண்ணற்ற மக்கள் பாதிக்கப்பட்டனர். 12 பேரு உயிரிழந்தனர். சம்பவம் நடந்த இரண்டு நாட்கள் கழித்து விசாகபட்டினத்தில், இறந்தவர்கள் மூன்று பேரின் உடல்களை வைத்து நீதி கேட்டு சிலர் போராட்டம் நடத்தினர்.

இந்த விவாகரம் தொடர்பாக, இன்று (மே 9) பவன் கல்யாண் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"கரோனா தொற்று காலத்தில் நாம் வாயு கசிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதில் கவனம் செலுத்த வேண்டும். போராட்டங்களில் அல்ல. சில அரசியல் கட்சிகள் எல்ஜி பாலிமர்ஸ் வாயு கசிவை எதிர்த்து போராடுகிறார்கள். இது கோவிட்-19 தொற்று கொண்ட நோயளிகள். அதிகரிக்கும். நிலைமை கை மீறிப் போகும்.

நமது கட்சி தொண்டர்கள், தலைவர்கள் யாரும் இது போன்ற போராட்டங்களில் பங்கெடுக்க வேண்டாம். இதுபோன்ற போராட்டங்களுக்கான நேரம் இதுவல்ல. தயவு செய்து பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உதவுவதில் கவனம் செலுத்துங்கள். இந்த வாயு கசிவைப் பற்றிய மத்திய, மாநில அரசுகளின் அறிக்கை வரும் வரை காத்திருப்போம்"

இவ்வாறு பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x