Published : 04 May 2020 11:27 AM
Last Updated : 04 May 2020 11:27 AM

வரலாற்றில் முதல் முறை: முழுக்க முழுக்க டிஜிட்டல் முறையில் நடக்கும் ‘க்ரோர்பதி’ நிகழ்ச்சி; சோனி நிறுவனம் அறிவிப்பு

‘கோன் பனேகா க்ரோர்பதி’ நிகிழ்ச்சி முழுக்க முழுக்க டிஜிட்டல் முறையில் நடைபெறவுள்ளதாகவும், அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் சோனி நிறுவனம் அறிவித்துள்ளது.

பிரபல கேள்வி-பதில் நிகழ்ச்சியான ‘கோன் பனேகா க்ரோர்பதி’யை நடிகர் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கி வருகிறார். 11 சீசன் நிறைவு பெற்ற இந்த நிகழ்ச்சியின் 12-வது சீசன் இந்த ஆண்டு நடைபெறவுள்ளது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்நிகழ்ச்சியை வழக்கமாக நடக்கும் முறையில் நடத்த இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனால் இந்நிகழ்ச்சியைத் தயாரித்து வரும் சோனி என்டர்டெயின்மென்ட் டெலிவிஷன் நிறுவனம் இதை முழுக்க டிஜிட்டல் முறையில் நடத்தத் திட்டமிட்டுள்ளது.

அமிதாப் பச்சன் தன் வீட்டில் இருந்தபடியே கேள்விகளைக் கேட்பார். இதற்கான பதில்களை எஸ்எம்எஸ் மூலமாகவோ சோனி லைவ் செயலி மூலமாகவோ போட்டியாளர்கள் பதிலளிக்க வேண்டும். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் மே 9 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று சோனி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சோனி நிறுவனத்தில் தொலைத்தொடர்புத் துறை தலைவர் அமித் ரைஸிங்கானி கூறும்போது, '' 'கோன் பனேகா க்ரோர்பதி' நிகிழ்ச்சி வரலாற்றில் முதல் முறையாகப் போட்டியாளர்கள் தேர்வு மற்றும் ஒளிபரப்பு அனைத்தும் முழுக்க முழுக்க டிஜிட்டல் முறையில் நடைபெறவுள்ளது. தொழில்நுட்பத்தின் சக்தியை இந்த சீசன் மீண்டும் ஒருமுறை தீர்மானிக்கும் என்று நம்புகிறோம்'' என்றார்.

‘கோன் பனேகா க்ரோர்பதி’ சீசன் 12க்கான ப்ரோமோவுக்காக வீட்டில் இருந்தபடியே அமிதாப் பச்சன் நடித்துள்ளார். இந்த ப்ரோமோவை ‘டங்கல்’ இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x