ஆண்ட்ரியா நடிக்கும் ‘லாக்டவுன்’ குறும்படம்

ஆண்ட்ரியா நடிக்கும் ‘லாக்டவுன்’ குறும்படம்
Updated on
1 min read

ஆதவ் கண்ணதாசன் இயக்கத்தில் வெளியாகவுள்ள ‘லாக்டவுன்’ என்ற குறும்படத்தில் ஆண்ட்ரியா நடிக்கிறார்.

நாட்டில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் கடந்த மாதம் 24-ம் தேதி நள்ளிரவு முதல் நாடு முழுவதும் லாக்டவுனை மத்திய அரசு கொண்டு வந்தது. கரோனா பாதிப்பு குறையாததை அடுத்து ஏப்ரல் 15-ம் தேதி முதல் மே 3-ம் தேதி வரை 2-ம் கட்டமாக லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பிரபலங்கள், பொதுமக்கள் எனப் பலரும் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

கரோனா அச்சுறுத்தல், சமூக விலகல் குறித்துப் பிரபலங்கள் பலரும் தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் விழிப்புணர்வு வீடியோக்கள், குறும்படங்கள், புகைப்படங்கள் ஆகியற்றைப் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஆதவ் கண்ணதாசன் இயக்கத்தில் ‘லாக்டவுன்’ என்னும் குறும்படம் வெளியாகவுள்ளது. இதில் முக்கியக் கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடிக்கிறார்.

கடந்த வாரம் தொடங்கிய இக்குறும்படத்தின் படப்பிடிப்பு ஒரே நாளில் முடிக்கப்பட்டது. ஊரடங்கு காலத்தில் ஒரு பெண்ணின் மனநிலையை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

முழுக்க முழுக்க ஐபோனில் எடுக்கப்பட்டுள்ள இப்படம் நாளை (29.04.20) வெளியாகவுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in