Published : 24 Apr 2020 10:29 PM
Last Updated : 24 Apr 2020 10:29 PM
மருத்துவர் சைமன் உடலை புதைக்க நடந்த சம்பவங்கள் தொடர்பாக நடிகை காயத்ரி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
சென்னையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மருத்துவர் சைமன் உயிரிழந்தார். அவரது உடலைப் புதைக்கச் சென்ற ஊழியர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை அண்ணா நகரைச் சேர்ந்த சிலர் கடுமையாகத் தாக்கினர். பின்னர் மருத்துவரின் உடல் போலீஸ் உதவியுடன் புதைக்கப்பட்டது. தாக்குதல் நடத்திய 21 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அரசியல் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள், மருத்துவர்கள், மருத்துவ சங்கத்தினர் எனப் பலரும் வேதனையையும் கண்டனத்தையும் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக நடிகை காயத்ரி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"நம் உயிரை காக்கும் மக்களுக்கு இதுதான் நாம் கொடுக்கும் மரியாதை என்றால் ஒரு சமூகமாக நாம் தோற்றுவிட்டோம். நமக்காக டாகடர் சைமன், டாகடர் பிரதீப் போன்றோர் செய்த தியாகங்களை நினைவுகூர்வோம். அவர்கள் பாகுபாடு பார்க்கவில்லை. நாமும் பார்க்கக்கூடாது. இது போன்ற ஒரு கடினமான சூழலில் மருத்துவர்கள் பாதுகாப்பாக வீட்டில் இருக்க முடிவுசெய்தால் என்னவாகும் என்று நினைத்துப் பாருங்கள்"
இவ்வாறு காயத்ரி தெரிவித்தார்.
Imagine your life in this pandemic if doctors decided to stay home and stay safe.
— Gayathrie (@SGayathrie) April 22, 2020
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT