Published : 24 Apr 2020 07:48 PM
Last Updated : 24 Apr 2020 07:48 PM
டிக் டாக் செயலியில் 'மாஸ்டர்' படத்தின் பாடல்கள் பெரும் சாதனை புரிந்துள்ளன.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. ஏப்ரல் 9-ம் தேதி வெளியாகியிருக்க வேண்டிய படம் கரோனா ஊரடங்கால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தற்போது படத்தின் பணிகள் அனைத்தையும் முடித்து வெளியீட்டுக்குத் தயாராக வைத்துள்ளது படக்குழு.
இந்தப் படத்தில் பாடல்கள் அனைத்துமே வெளியாகிவிட்டன. அவை பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. குறிப்பாக விஜய் பாடியுள்ள 'குட்டி ஸ்டோரி', 'வாத்தி கம்மிங்' மற்றும் 'வாத்தி ரெய்டு' ஆகிய பாடல்கள் இளைஞர்கள் மத்தியில் வைரலாகி வருகிரது.
இந்தப் பாடலை வைத்து பலரும் டிக் டாக் வீடியோக்கள் உருவாக்கி, அவர்களுடைய கணக்கில் வெளியிட்டனர். இதில் பலருடைய நடன அமைப்புகள் நன்றாக இருந்ததால், டிக் டாக் செயலியில் 'மாஸ்டர்' பாடல்கள் அடங்கிய வீடியோக்கள் குவிந்தன.
தற்போது டிக் டாக் செயலியில் மட்டும் 'மாஸ்டர்' பாடல் அடங்கிய வீடியோக்கள் மட்டும் 1500 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை புரிந்துள்ளது. இதனால், 'மாஸ்டர்' படக்குழுவினர் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கரோனா அச்சுறுத்தல் முடிவுக்கு வந்து நிலைமை சரியானால், ஜூன் 22-ம் தேதி விஜய் பிறந்த நாளில் 'மாஸ்டர்' வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
They call me Master, Vetrigal varum faster
Thanks for the 1500M fam Keep it counting nanbaa! #1500MForMaster pic.twitter.com/3FCKAV1zMa— XB Film Creators (@XBFilmCreators) April 23, 2020
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT