Published : 22 Apr 2020 09:52 PM
Last Updated : 22 Apr 2020 09:52 PM
இணையத்தில் எழுந்த சர்ச்சைத் தொடர்பாக 'நிசப்தம்' படக்குழு விளக்கமளித்துள்ளது.
ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சைலன்ஸ்’. இந்தி, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் இந்தப் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர். தமிழில் இந்தப் படத்துக்கு ‘நிசப்தம்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
சஸ்பென்ஸ் த்ரில்லரான இந்தப் படம், வசனமே இல்லாமல் உருவாக்கப்பட்டுள்ளது. கோபி மோகன் மற்றும் கோனா வெங்கட் இருவரும் இணைந்து இந்தப் படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளனர். மேலும், இந்தப் படத்தின் இணை தயாரிப்பாளராகவும் கோனா வெங்கட் பணியாற்றுகிறார்.
இதில், மாதவன், அனுஷ்கா, அஞ்சலி, ஷாலினி பாண்டே, சுப்பராஜு ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படம் ஏப்ரல் 2-ம் தேதி வெளியாவதாக இருந்தது. ஆனால், கரோனா ஊரடங்கால் இந்தப் படம் திட்டமிட்டப்படி வெளியாகவில்லை. இதனிடையே, இந்தப் படத்தை டிஜிட்டலில் படக்குழு வெளியிட படக்குழு முடிவு செய்ததாகவும், இதனால் அனுஷ்காவுக்கும் படக்குழுவினருக்கும் மனவருத்தம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த தகவல் இணையத்திலும் வைரலானது.
இதனைத் தொடர்ந்து படக்குழுவினர் தங்களுடைய ட்விட்டர் பதிவில் ஒரு சிறுகடிதத்தை வெளியிட்டுள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:
"படப்பிடிப்பு ஆரம்பித்த முதல் நாளிலிருந்து இன்று வரை, எங்கள் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவரும், நல்லது கெட்டது என அனைத்திலும் எங்களுக்கு ஆதரவாக தூண்களைப் போல் நிற்கிறார்கள். முக்கியமாக அனுஷ்கா ஷெட்டி அவர்கள்.
அடிப்படையற்ற எந்த புரளிகளையும் நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். எதாவது பெரிய முன்னேற்றம் இருந்தால் அதை அதிகாரப்பூர்வமாக நாங்கள் அறிவிப்போம்"
இவ்வாறு 'நிசப்தம்' படக்குழு தெரிவித்துள்ளது.
Please do not believe in any baseless rumours you come across. #Nishabdham#AnushkaShetty @ActorMadhavan @yoursanjali @hemantmadhukar #TGVishwaprasad @konavenkat99 @vivekkuchibotla @peoplemediafcy @KonaFilmCorp @GopiSundarOffl @MangoMusicLabel pic.twitter.com/13b3y9FRaq
— KonaFilmCorporation (@KonaFilmCorp) April 21, 2020
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT