Published : 19 Apr 2020 05:40 PM
Last Updated : 19 Apr 2020 05:40 PM

முத்தையா இயக்கத்தில் கவுதம் கார்த்திக் - லட்சுமி மேனன்

முத்தையா இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் கவுதம் கார்த்திக், லட்சுமி மேனன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.

'குட்டிப்புலி' படத்தின் மூலம் தமிழ்த்மு திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் முத்தையா. இவருடைய இயக்கத்தில் கார்த்தி நடித்த 'கொம்பன்' திரைப்படம் மிகப்பெரிய வசூல் ரீதியிலான வெற்றியைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து முன்னணி இயக்குநராக வலம் வரத் தொடங்கினார்.

அதற்குப் பிறகான படங்கள் எதுவுமே, எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. இறுதியாக 2019-ம் ஆண்டு ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிப்பில் கவுதம் கார்த்திக், மஞ்சிமா மோகன் நடித்த 'தேவராட்டம்' படத்தை இயக்கினார். அதற்குப் பிறகு தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார்.

சில மாதங்களுக்கு முன்பு, இவருடைய கதையை 2டி நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. ஆனால், சூர்யா - கார்த்தி இருவருமே வெவ்வேறு படங்களில் மும்முரமாக இருப்பதால் ஒரு படம் பண்ணிவிட்டு அப்புறம் வருகிறேன் என்று தெரிவித்துவிட்டார் முத்தையா.

இறுதியாக இவருடைய கதையைத் தயாரிக்க இந்தர் குமார் முன்வந்துள்ளார். இவர் 'குற்றம் 23', 'தடம்' உள்ளிட்ட படங்களைத் தயாரித்தவர். தற்போது சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள 'கொம்புவச்ச சிங்கம்டா' படத்தைத் தயாரித்துள்ளார். இதனைத் தொடர்ந்து முத்தையா இயக்கும் படத்தைத் தயாரிக்கவுள்ளார்.

இந்தப் படத்தில் 'தேவராட்டம்' படத்தின் நாயகனாக கவுதம் கார்த்திக்கே நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். நாயகியாக லட்சுமி மேனனை நடிக்க வைக்கப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் அவர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் எனத் தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x