Published : 31 Mar 2020 02:35 PM
Last Updated : 31 Mar 2020 02:35 PM
ஜப்பானின் பிரபல நகைச்சுவைக் கலைஞர் கென் ஷிமுரா, கரோனா கிருமித் தொற்றால் காலமானார். அவருக்கு வயது 70.
உடல்நலக் குறைவு என்று ஆரம்பத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த ஷிமுராவுக்கு பின்னர் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மார்ச் 20-ம் தேதி அன்று உடல் சோர்வு உள்ளிட்ட நிமோனியாவுக்கான கடுமையான அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஷிமுரா. மார்ச் 23-ம் தேதி கரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை ஷிமுரா காலமானார்
ஜப்பானின் ராபின் வில்லியம்ஸ் என்று அறியப்படும் ஷிமுராவின் மறைவு ஜப்பானிய மக்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.
1974 ஆம் வருடம் தனது கலைப் பயணத்தைத் தொடங்கினார் ஷிமுரா. சார்லி சாப்ளின் போல நடனமாடி ஜப்பான் முழுவதும் அன்றைய காலகட்டத்தில் பிரபலமானார். அமெரிக்க நகைச்சுவைக் கலைஞர் ஜெர்ரி லீவிஸ்தான் தனது ஆதர்சம் என்று ஷிமுரா கூறியுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை மட்டும் ஜப்பானில் 173 புதிய கரோனா தொற்று நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். இதில் 68 பேர் டோக்கியோவைச் சேர்ந்தவர்கள். கரோனா தொற்று காரணமாக ஜப்பானில் இந்த வருடம் நடக்கவிருந்த ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த வருடத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT