Published : 17 Mar 2020 01:27 PM
Last Updated : 17 Mar 2020 01:27 PM
தனக்கு விஜய் நன்றி தெரிவித்த வீடியோ பதிவுடன், பழைய வீடியோ ஒன்றையும் சேர்த்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இயக்குநர் ரத்னகுமார்.
சமீபத்தில் சென்னையில் 'மாஸ்டர்' படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் ரசிகர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட யாருக்குமே அனுமதி வழங்கப்படவில்லை. படக்குழுவினர் மற்றும் அவர்களது நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் விஜய் தனது பேச்சில், படக்குழுவினர் அனைவரையுமே பாராட்டிப் பேசினார். அதில் 'மாஸ்டர்' படத்தின் திரைக்கதையில் உதவி புரிந்துள்ள இயக்குநர் ரத்னகுமாரைப் பற்றி விஜய் கூறுகையில், "அவர் இயக்குநருடைய நெருங்கிய நண்பர். பொன்.பார்த்திபனும் இவரும் திரைக்கதையில் உதவி செய்திருக்கிறார்கள். வசனங்களிலும் உதவி செய்திருக்கிறார்கள்.
2 படங்களை இயக்கிவிட்டு, இதெல்லாம் செய்ய வேண்டும் என்று கேட்டால் அவசியமில்லை. இந்த மாதிரி நிறைய பாசிட்டிவ் நண்பர்கள் எல்லாம் இணைந்து இந்தப் படம் உருவாகியுள்ளது. நன்றி ரத்னா" என்று குறிப்பிட்டார் விஜய்.
இந்த வீடியோ பதிவுடன், விஜய் பாட்டுக்கு தான் நடனமாடிய பழைய வீடியோவை இணைத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் இயக்குநர் ரத்னகுமார்.
அந்த வீடியோ பதிவுடன் இயக்குநர் ரத்னகுமார், "2010-ம் ஆண்டு சேப்பாக்கம் மைதானத்தில் 'சென்னை சூப்பர் கிங்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப்' அணிப் போட்டிக்கு 'போக்கிரி பொங்கல்' பாடலுக்கு நடனமாடினேன். இப்போது 2020-ம் ஆண்டு. எனது வாழ்க்கையில் எப்போதும் ஒரு அங்கமாக இருக்கும் தளபதிக்கு நன்றி. எல்லாமே தளபதிக்காகத்தான்” என்று குறிப்பிட்டுள்ளார்.
On the year 2010 i was dancing in Cheppauk for Pokkiri pongal during CSK vs KXI match. And now in 2020 this close. Thank you Thalapathy for always being part of my life Anything for தளபதி . #MasterAudioLaunch #Master pic.twitter.com/3UwbTBxgkP
— Rathna kumar (@MrRathna) March 17, 2020
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT