Published : 14 Mar 2020 07:19 PM
Last Updated : 14 Mar 2020 07:19 PM
போஸ் வெங்கட் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் 'உறியடி' இயக்குநர் விஜயகுமார் நாயகனாக நடிக்கவுள்ளார்.
பல்வேறு நாடகங்கள், படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துப் புகழ் பெற்றவர் போஸ் வெங்கட். சில நாட்களுக்கு முன்பு வெளியான 'கன்னி மாடம்' என்ற படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமானார்.
ஸ்ரீராம், காயத்ரி, 'ஆடுகளம்' முருகதாஸ், கஜராஜ், 'சூப்பர் குட்' சுப்பிரமணி, 'மைம்' கோபி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தனர். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படத்துக்குப் போதிய ஆதரவு கிடைத்தது. இயக்குநர் பா.இரஞ்சித் தொடங்கி பல்வேறு இயக்குநர்களும் இந்தப் படக்குழுவினரைப் பாராட்டினார்கள்.
இதனைத் தொடர்ந்து, தனது அடுத்த படத்தில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார் போஸ் வெங்கட். இதில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் 'உறியடி' இயக்குநர் விஜயகுமார். இதில் விஜயகுமாருக்குத் தந்தையாக பசுபதி நடிக்கிறார். மூவ் ஆன் பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கப்படும் இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT