Published : 29 Feb 2020 09:00 PM
Last Updated : 29 Feb 2020 09:00 PM
பாங் ஜூன் ஹோ இயக்கத்தில் வெளியாகி சர்வதேச அளவில் பெயர் பாராசைட் திரைப்படம் கிராஃபிக் நாவலாக வெளியாகவுள்ளது.
சிறந்த படம், சிறந்த சர்வதேசப் படம், சிறந்த திரைக்கதை, சிறந்த இயக்குநர் என நான்கு ஆஸ்கர் விருதுகளை வென்று சினிமா ஆர்வலர்கள் பலரை ஆச்சரியப்படுத்தியது தென் கொரியப் படமான பாராசைட். 92 வருட ஆஸ்கர் வரலாற்றில் சிறந்த திரைப்படம் என்ற விருதைப் பற்ற முதல் அயல்மொழித் திரைப்படம் என்ற பெருமை பெற்ற திரைப்படமாகும்.
இந்தப் படத்தின் முன் தயாரிப்பில், ஸ்டோரிபோர்ட் எனப்படுகிற, படத்தின் காட்சிகளைப் பற்றிய வரிவடிவப் படங்கள் தற்போது கிராஃபிக் நாவலாக மாற்றப்படவுள்ளன. இந்த வரிவடிவப் படங்களை வரைந்தது படத்தின் இயக்குநர் பாங் ஜூன் ஹோ என்பது குறிப்பிடத்தக்கது.
கிராண்ட் செண்ட்ரல் பப்ளிஷிங் என்ற நிறுவனம் இதை அமெரிக்காவில் வெளியிடவுள்ளது. 304 பக்கங்களாக, மே 19 அன்று இந்த புத்தகம் வெளியாகவுள்ளது. ஏற்கனவே தென் கொரியாவில் இந்த நாவல் வெளியாகிவிட்டது. கொரிய மொழியில் இருந்து வசனம் உள்ளிட்ட மற்ற விவரங்கள் மொழி பெயர்க்கப்படும் என்றும், படத்தை உருவாக்கியதைப் பற்றி, சிந்தனையோட்டத்தைப் பற்றி இயக்குநரின் முன்னுரை ஒன்று இடம் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாராசைட், தொலைக்காட்சிக்கான 6 மணி நேர வடிவமாக தற்போது உருவாக்கப்படுகிறது. இதிலும் இயக்குநர் பாங் பணியாற்றி வருகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT