Published : 23 Feb 2020 09:14 AM
Last Updated : 23 Feb 2020 09:14 AM
மாநிலம் முழுவதும் போதைப் பொருள் விநியோகம் செய்யும் கும்பலின் தலைவன் திவாகர் (பிரசன்னா). அவனைப் பிடிக்க முயற்சிக்கும் காவல் உயரதி காரியும், சமூக சேவகரும் கொலை செய்யப்படு கிறார்கள். போதை மருந்து விநியோகத்தைத் தடுத்து நிறுத்த நினைக்கும் அந்தப் பிரிவின் காவல் அதிகாரியான ஆர்யன் (அருண் விஜய்), தனது சக அதிகாரிகளான சத்யா (பிரியா பவானி சங்கர்), பாலா ஹாசன் ஆகியோருடன் இணைந்து திவாகரைப் பிடிக்க வலை விரித்து காய் நகர்த்துகிறார்.
திவாகருக்குச் சொந்தமான போதைப் பொருள் லாரியை ஆர்யன் கைப்பற்றிவிட, பதி லுக்கு பிணையாக ஆர்யன் குடும்பத்தைக் கடத்திவைத்து மிரட்டுகிறான். இந்த ஆடுபுலி ஆட்டத்தில் யாருடைய கை ஓங்கியது என்பது கதை.
‘துருவங்கள் பதினாறு’ படத்தின் மூலம் விறுவிறுப்பான திரைக்கதைக்காகப் பேசப்பட்ட வர் கார்த்திக். இந்தப் படத்தில் திரைக்கதை எங்கே இருக்கிறது என்று புதைபொருள் ஆய்வில் ஈடுபட வைத்துவிட்டார்.
படத்தில் பிரதானமாக நான்கு கதாபாத்திரங் கள். காதல், நகைச்சுவை காட்சிகள் இல்லாததால் இரண்டு மணி நேரத்துக்கும் குறைவாகவே பயணிக்கும் படத்தில் நாடகத் தன்மையே மிஞ்சி நிற்கிறது.
போதைப் பொருள் கடத்தல் கும்பலின் தலைவனைக் கண்டுபிடிப்பதன் பின்னணியில் புதுமையோ, சுவாரஸ்யமோ இல்லை. வில்லன் யார் எனத் தெரிந்த பிறகு வில்லனுக்கும், நாயகனுக்கும் இடையிலான கண்ணாமூச்சி ஆட்டம் சூடுபிடிக்கப் போகிறது என்று எதிர்பார்த்தால், கதையில் சென்டிமென்ட் புகுந்து கபடி ஆடுவதில் திரைக்கதை தனது சுவாரஸ்யத்தை நழுவவிட்டு விடுகிறது. சென்டிமென்ட் காட்சிகளிலாவது அழுத்தம் இருக்கிறதா என்றால் அவையும் நாடகம்தான்.
குடியிருப்புக்கு மத்தியில் போதைப் பொருள் இருப்புக் கூடம். அங்கே துப்பாக்கிச் சத்தம் கேட்டால்கூட மக்கள் யாரும் வெளியே வந்து எட்டிப்பார்க்காமல் இருக்கிறார்கள். போதைப் பொருள் கும்பலிடம் துப்பாக்கி இல்லாமல் இருப்பதில் தொடங்கி, காட்சி அமைப்பிலும் ஏகப்பட்ட ஓட்டைகள். இரண்டாம் பாகத்துக்காக படத்தின் முடிவில் ஒரு திருப்பத்தை வைத்திருக் கிறார் இயக்குநர். அதை இடைவேளையில் பயன் படுத்தியிருந்தால்கூட இரண்டாம் பாதி படத்துக் குத் தேவையான சம்பவங்கள் கிடைத்திருக்கும். அந்த வாய்ப்பையும் தவறவிட்டிருக்கிறார் இயக்குநர்.
போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி ஆர்யனாக அலட்டலோ, மிகையோ இல்லாத அருண் விஜய்யின் நடிப்பு ஆச்சரியம். அதே போல போதை மாஃபியா தலைவனாக வரும் பிரசன்னாவின் ஸ்டைலும், பார்வைகளும் மிரட்டுகின்றன. பாவம் பிரியா பவானிசங்கர். அருண் விஜய்யின் உதவியாளராக வந்து ஒரே மாதிரியான முகபாவனைகளுடன் துப் பாக்கியால் சுட்டுக்கொண்டே இருக்கிறார்.
ஜேக் பிஜாய் இசையில் புதுமை ஏதும் இல்லை. இரவுக் காட்சிகளை அழகாகப் படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் கோகுல் பினாய்.
முதல் பாகத்திலேயே இரண்டாம் பாகத்துக் கான கதைக் கருவை நிறுவிட வேண்டும் என்று யோசித்திருக்கிறார் இயக்குநர். அதற்கான மெனக்கெடலை முதல் பாகத்தில் காட்டாமல் போனதால் இந்த ‘மாஃபியா’வால் ரசிகர்களை மயக்கமுடியவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT