Published : 07 Mar 2025 10:18 PM
Last Updated : 07 Mar 2025 10:18 PM
சென்னை: துருவ் விக்ரம் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள ‘பைசன் காளமாடன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
ஃபர்ஸ்ட் லுக் எப்படி? - பின்னணியில் காளை மாடு ஒன்று ஆக்ரோஷமான பார்வையுடன் இருக்க அதற்கு முன்னால் துருவ் விக்ரம் நிற்கிறார். வழக்கமான மாரி செல்வராஜ் படங்களை போலவே இப்படமும் மிகவும் சீரியஸ்தன்மை கொண்ட கதைக்களம் என்பதை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.
நான் எங்கிருந்து வருகிறேன் என்று உனக்கு தெரியும்
ஏன் வருகிறேன் என்றும்
உனக்கு தெரியும்
வந்து சேர்ந்தால் என்ன செய்வேனென்றும் உனக்கு தெரியும்
ஆதலால் ….
நீ கதவுகளை அடைக்கிறாய்
நான் முட்டிமோதி மூர்க்கமாய் உடைக்கிறேன்.
—
பைசன் (காளமாடன்)#BisonKaalamaadan @applausesocial… pic.twitter.com/8ACSMdys4B— Mari Selvaraj (@mari_selvaraj) March 7, 2025
‘மாமன்னன்’ படத்திற்குப் பிறகு துருவ் விக்ரம் நடிக்கும் ’பைசன் காளமாடன்’ படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலி பகுதிகளில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து சென்னையில் கபடி போட்டி நடைபெறுவது போன்று அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு நடத்தி வந்தார்கள். தற்போது அத்துடன் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவுற்றதாக படக்குழு அண்மையில் அறிவித்தது.
இப்படத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், லால், பசுபதி, கலையரசன், ரஜிஷா விஜயன், ஹரி கிருஷ்ணன், அழகம் பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளராக நிவாஸ் கே.பிரசன்னா, ஒளிப்பதிவாளராக எழில் அரசு ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன.
இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதனை முடித்துவிட்டு அடுத்து தனுஷ் நடிக்கும் படத்தினை மாரி செல்வராஜ் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு ‘பைசன் காளமாடன்’ பட வெளியீட்டுக்கு பின்பே வெளியாகவுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment