Published : 18 Feb 2025 11:45 PM
Last Updated : 18 Feb 2025 11:45 PM
ஹைதராபாத்: அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா 2: தி ரூல்’ திரைப்படம் உலகம் முழுவதும் மொத்தம் ரூ.1871 கோடி வசூல் செய்திருப்பதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் ‘புஷ்பா 2’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்ட இப்படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார்.
கடந்த ஆண்டு டிச.5 அன்று திரையரங்குகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் பெரும் சாதனை படைத்தது. முதல் நாளிலேயே ரூ.294 கோடி வசூலித்து இந்தியாவிலேயே முதல் நாள் அதிகம் வசூலித்த படம் என்ற பெருமையை பெற்றது. 6 நாட்களில் ரூ.500 கோடி வசூலை கடந்தது.
அண்மையில் இப்படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி அதிலும் அதிகம் பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக மாறியது. இந்த நிலையில் ‘புஷ்பா 2’ திரைப்படம் உலக அளவில் முழுவதும் மொத்தம் ரூ.1871 கோடி வசூல் செய்திருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இதன் மூலம் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ் நடித்த ‘பாகுபலி 2’ படத்தின் வசூல் சாதனையை (ரூ.1788 கோடி) ‘புஷ்பா 2’ முறியடித்துள்ளது.
Shattering many records and creating new records, #Pushpa2TheRule stands tall as INDIAN CINEMA'S INDUSTRY HIT#Pushpa2TheRule grosses 1871 CRORES WORLDWIDE
RECORDS RAPA RAPAA #Pushpa2#WildFirePushpa
Icon Star @alluarjun @iamRashmika @aryasukku #FahadhFaasil… pic.twitter.com/mWoLOa123e— Mythri Movie Makers (@MythriOfficial) February 18, 2025
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment