Published : 26 Dec 2024 08:53 PM
Last Updated : 26 Dec 2024 08:53 PM
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கும் ‘சிக்கந்தர்’ படத்தின் டீசர் வெள்ளிக்கிழமை முற்பகல் வெளியாகிறது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கும் படம், ‘சிக்கந்தர்’. பான் இந்தியா படமாக உருவாகும் இந்தப் படத்தை சஜித் நாடியத்வாலா தயாரிக்கிறார். ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கிறார். சத்யராஜ், பிரதீக் பப்பர் உட்பட பலர் நடிக்கின்றனர்.
ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இந்தப் படத்தில் நடித்தபோது சல்மான் கானுக்கு விலா எலும்பில் காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்குப் பின் படப்பிடிப்பில் அவர் மீண்டும் இணைந்தார்.
டிசம்பர் 27-ம் தேதியான வெள்ளிக்கிழமை சல்மான் கான் தனது 59-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி, அவர் நடித்து வரும் ‘சிக்கந்தர்’ படத்தின் டீசர் வெளியாகிறது. காலை 11.07 மணிக்கு டீசர் வெளியாகும் என்ற தகவலை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்தப் படத்துக்காக மும்பையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவி மற்றும் மாதுங்காவை போல, கோரேகானில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது. ரூ.15 கோடியில் அமைக்கப்பட்டுள்ள இந்த செட்டில் படப்பிடிப்பு நடந்து வந்தது. ஆக்ஷன் காட்சிகள் மட்டுமின்றி எமோஷனல் காட்சிகளும் இங்கு படமாக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு ரம்ஜான் விடுமுறைக்கு ‘சிக்கந்தர்’ வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Just a lil more wait… #SikandarTeaser Dropping tomorrow at 11:07 AM https://t.co/FTS1FnLxsh #SajidNadiadwala’s #Sikandar
Releasing in cinemas EID 2025 @BeingSalmanKhan @iamRashmika @DOP_Tirru@NGEMovies @WardaNadiadwala @ZeeMusicCompany @PenMovies… pic.twitter.com/UNsrQv4Wii
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT