Published : 25 Dec 2024 08:34 AM
Last Updated : 25 Dec 2024 08:34 AM

‘என் குருவை இழந்துவிட்டேன்’ - கமல்ஹாசன்

பிரபல இயக்குநர் ஷியாம் பெனகல் (90), உடல் நலக்குறைவு காரணமாக மும்பையில் நேற்று முன்தினம் காலமானார்.

அவரது மறைவுக்குப் பிரபல நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது இறுதிச் சடங்கு மும்பை சிவாஜி பார்க்கில் உள்ள மின் மயானத்தில் நேற்று நடந்தது. பாலிவுட் திரை பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “மனிதாபிமானமுள்ள ஒரு கதைசொல்லியை இந்தியா இழந்துவிட்டது. நான் ஒரு குருவை இழந்துவிட்டேன். தனது படங்களின் மூலம், உண்மையான இந்தியாவைத் திரைக்குக் கொண்டு வந்தவர். ஆழமான சமூகப் பிரச்சினைகளைப் படங்களில் பேசிய அவர், சாதாரண விஷயங்களையும் நேசிக்க வைத்தவர்” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x