Published : 25 Dec 2024 08:28 AM
Last Updated : 25 Dec 2024 08:28 AM
பிரபல ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன், இன்செப்சன், இன்டர்ஸ்டெல்லர், டன்கிரிக், டெனட் உட்பட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கி கடந்த வருடம் வெளியான ‘ஓபன்ஹெய்மர்’ திரைப்படம் 7 ஆஸ்கர் விருதுகளை அள்ளியது.
இந்நிலையில் அவரது அடுத்த படம் பற்றிய தகவல்கள் கடந்த சில நாட்களாக வெளியாகிவந்தன. இந்நிலையில் யுனிவர்சல் பிக்சர்ஸ் இதுபற்றி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நோலனின் 13-வது படமான இதற்கு ‘தி ஒடிஸி’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.
ஹோமரின் கிரேக்க காவியமான ‘தி ஒடிஸி’யை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாகிறது. புதிய ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாகும் இந்தப்படம் உலகம் முழுவதும் 2026-ம் ஆண்டு ஜூலை 17-ம் தேதி வெளியாக இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT