Published : 22 Dec 2024 09:55 PM
Last Updated : 22 Dec 2024 09:55 PM
அஜித் சாரின் அழைப்புக்கு காத்திருப்பதாக இயக்குநர் வெங்கட்பிரபு தெரிவித்துள்ளார்.
‘மங்காத்தா’ படத்துக்குப் பிறகு அஜித் - வெங்கட்பிரபு கூட்டணி இணைந்து பணிபுரியவில்லை. சில தினங்களுக்கு முன்பு கூட அடுத்த அஜித் படத்தை வெங்கட்பிரபு இயக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகின. இதற்கு இரு தரப்புமே பதிலளிக்கவில்லை.
இதனிடையே இந்தாண்டு தமிழில் வெளியான படங்களில் அதிக வசூல் செய்தது ‘கோட்’ படம் தான். இதற்காக பேட்டியொன்று அளித்துள்ளார் வெங்கட்பிரபு. அதில் ‘மங்காத்தா’ படத்துக்குப் பிறகு ஏன் அஜித்தை இயக்கவில்லை என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு வெங்கட்பிரபு, “மங்காத்தா படத்துக்குப் பிறகு அஜித் சார் படத்தை இயக்க பல முறை வாய்ப்புகள் வந்தன. ஆனால் ஏற்கனவே சில படங்களில் ஒப்பந்தமாகி இருந்ததால் இயக்க முடியவில்லை. அதன் காரணமாக அவர் கோபமாக இருக்கிறார் என்று நினைக்கிறேன். ஆனால், அவரது அழைப்புக்காக காத்திருக்கிறேன்” என்று பதிலளித்துள்ளார்.
‘கோட்’ படத்துக்குப் பிறகு சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கும் படத்தை இயக்கவுள்ளார் வெங்கட்பிரபு. இதில் நாயகன் யார் என்பது விரைவில் தெரியவரும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT