Published : 20 Dec 2024 03:02 PM
Last Updated : 20 Dec 2024 03:02 PM

“நம்பிக்கையுடன் இருக்கிறேன்” - சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார் சிவராஜ்குமார் 

பெங்களூரு: “கடந்த 2 நாட்களில் இதயத்துடிப்பு, ரத்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை என நாங்கள் எடுத்த அனைத்து டெஸ்ட்டுகளிலும் பாசிட்டிவ் ரிசல்ட் வந்துள்ளது. இந்த நேர்மறையான முடிவுகள் எனக்கு நம்பிக்கை அளித்துள்ளன. நான் ஒருமாதம் கழித்து மீண்டும் இந்தியா திரும்புவேன்” என நடிகர் சிவராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படும் சிவராஜ்குமார், தமிழில் வெளியான ‘ஜெயிலர்’ படத்தின் ஒரு சில காட்சிகள் வந்தாலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். பின்பு ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்தார். அண்மையில் அவர் நடிப்பில் ‘பய்ரதி ரனகல்’ கன்னடப் படம் வெளியானது. இந்தப் படத்தின் புரொமோஷன் பேட்டிகளில், தனக்கு உடல் ரீதியான பாதிப்பு இருப்பதாகவும், அது குறித்து ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி அச்சப்படுத்த விரும்பவில்லை என்றும், சிகிச்சைக்காக டிசம்பர் மாதம் அமெரிக்கா செல்ல இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் அமெரிக்க சென்றுள்ள அவர் முன்னதாக அளித்த பேட்டியில், , “எனக்கு சிகிச்சை அளிக்க இருக்கும் மருத்துவர் பெயர் முருகேஷ் என் மனோகர். பிரபலமான புற்றுநோயியல் நிபுணர். அவரிடம் பேசியபோது, எதற்கும் கவலைப்பட வேண்டாம், எந்த சிக்கலும் இல்லாமல் எல்லாம் நல்லபடியாக நடக்கும் என உறுதியளித்திருக்கிறார். கடந்த 2 நாட்களில் இதயத்துடிப்பு, ரத்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை என நாங்கள் எடுத்த அனைத்து டெஸ்ட்டுகளிலும் பாசிட்டிவ் ரிசல்ட் வந்துள்ளது.

இந்த நேர்மறையான முடிவுகள் எனக்கு நம்பிக்கை அளித்துள்ளன. நான் ஒருமாதம் கழித்து மீண்டும் இந்தியா திரும்புவேன். ஜனவரி 26-ம் தேதி இந்தியவாவில் இருப்பேன். நிச்சயம் திரும்பி வருவேன். என்னுடன் எனது மனைவி கீதா, இளைய மகள் நிவேதா ஆகியோர் வருகிறார்கள்” என தெரிவித்தார். அமெரிக்காவில் உள்ள மியாமி இன்ஸ்டியூட்டில் சிகிச்சை பெறவிருக்கிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x