Published : 18 Dec 2024 08:51 AM
Last Updated : 18 Dec 2024 08:51 AM

நமது தொன்மக் கதைகளை படமாக்க வேண்​டும்: நாசர்

சூப்பர் ஹிட்டான ‘தி லயன் கிங்’ படத்​தின் அடுத்த பாகமாக ‘முஃபாசா: தி லயன் கிங்’ என்ற படம் இப்போது உருவாகி இருக்​கிறது. பேரி ஜென்​கின்ஸ் இயக்கி​யுள்ள இந்தப் படம் டிச. 20-ல் வெளியாக இருக்​கிறது. ஆதரவற்ற குட்​டியான முஃபாசாவை​யும், அரச குடும்பத்​தின் வாரிசான டாக்கா எனப்​படும் அன்பான சிங்​கத்​தை​யும் சுற்றி இதன் கதைப் பின்னப்​பட்​டுள்​ளது.

இதில் முஃபாசா கதாபாத்​திரத்​துக்கு அர்ஜுன் தாஸ், ‘டாக்​கா’வுக்கு அசோக் செல்வன் குரல் கொடுத்​துள்ளனர். ரோபோ சங்கர், சிங்கம் புலி முறையே பும்பா மற்றும் டிமோன், ரஃபிக்கி​யின் இளைய பதிப்​புக்கு விடிவி கணேஷ் மற்றும் கிரோஸுக்கு நாசர் குரல் கொடுத்​துள்ளனர்.

இதன் பத்திரி​கை​யாளர்கள் சந்திப்​பில் நாசர் பேசும்​போது, “நடிக​னாக​வும் டப்பிங் கலைஞராக​வும் பல படங்கள் பணிபுரிந்து விட்​டேன். சிவாஜி, அமிதாப் பச்சன், இளையராஜா குரல்கள் எனக்கு அதிகம் பிடிக்​கும். எத்தனை வயதானாலும் உங்களுக்​குள் ஒரு குழந்தை எப்போதும் இருக்​கும். அதனால், இது குழந்தை​களுக்கான படம் மட்டும் கிடை​யாது. அனைவரும் இதைப் பார்க்​கலாம். தொன்​மையான புராணக்​கதைகள், வரலாற்றுக்​கதைகள் எல்லாம் நம்மிடம் உள்ளன. அதையும் நல்ல தரத்தில் இன்னும் மெரு​கூட்டி படமாக்க வேண்​டும்” என்றார். அர்ஜுன் தாஸ், அசோக் செல்​வன், சிங்​கம்​புலி உள்ளிட்​டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x