Published : 17 Dec 2024 03:33 PM
Last Updated : 17 Dec 2024 03:33 PM
ஹைதராபாத்: அனுஷ்கா நடித்துள்ள ‘Ghaati’ தெலுங்கு திரைப்படம் வரும் ஏப்ரல் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பான் இந்தியா முறையில், தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளில் வெளியாகிறது.
அனுஷ்கா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலி ஷெட்டி’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதையடுத்து அவர் இயக்குநர் கிரிஷ் ஜாகர்லமுடி இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்துக்கு ‘Ghaati’ என பெயரிடப்பட்டுள்ளது. இவர் தமிழில் வெளியான ‘வானம்’ படத்தின் ஒரிஜினல் தெலுங்கு வெர்ஷனான ‘வேதம்’ படத்தை இயக்கியவர்.
இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது இரண்டாவது முறையாக அனுஷ்காவுடன் கிரிஷ் கைகோத்துள்ளார். யுவி கிரியேஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு நாகவல்லி வித்யாசாகர் இசையமைக்கிறார். அண்மையில் வெளியான இந்தப் படத்தின் க்ளிம்ஸ் வீடியோ, அனுஷ்காவின் ஆக்ஷன் சம்பவமாக இந்தப் படம் இருக்கும் என்பதை உணர்த்தியது. இந்நிலையில், இந்தப் படம் வரும் ஏப்ரல் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT