Last Updated : 16 Dec, 2024 10:57 AM

 

Published : 16 Dec 2024 10:57 AM
Last Updated : 16 Dec 2024 10:57 AM

ராம் சரண் உடன் நடிக்காதது ஏன்? - விஜய் சேதுபதி விளக்கம்

ராம் சரணுடன் ஏன் நடிக்கவில்லை என்பது குறித்து நடிகர் விஜய் சேதுபதி விளக்கம் அளித்துள்ளார். புச்சி பாபு சனா இயக்கத்தில் ராம் சரண் புதிய படமொன்றில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஆரம்பகட்டப் பணிகளின்போது இதில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், அதில் அவர் நடிக்கவில்லை. அவருக்கு பதிலாக சிவராஜ்குமார் நடிக்கவுள்ளார் என தெரிகிறது.

தற்போது ‘விடுதலை 2’ படத்தை ஹைதராபாத்தில் விளம்பரப்படுத்தி வருகிறார் விஜய் சேதுபதி. அவரிடம் “RC16 படத்தில் நடிக்கவுள்ளீர்களா?” என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு “அப்படத்தில் நடிக்கவில்லை. ஏனென்றால் நேரமில்லை. பல்வேறு கதைகளை கேட்டு வருகிறேன். சில கதைகள் நன்றாக இருக்கும், அதில் எனது கதாபாத்திரம் போதுமானதாக இருக்காது” என்று பதிலளித்துள்ளார் விஜய் சேதுபதி.

முன்னதாக, புச்சி பாபு சனா இயக்கிய முதல் படமான ‘உப்பெனா’வில் நாயகிக்கு அப்பாவாக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தவர் விஜய் சேதுபதி. அப்படம் மாபெரும் வரவேற்பு பெற்றது. அப்போது முதல் புச்சி பாபு சனா - விஜய் சேதுபதி இருவரும் நெருங்கிய நண்பர்களாக வலம் வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x