Published : 15 Dec 2024 10:32 PM
Last Updated : 15 Dec 2024 10:32 PM
மும்பை: இந்தியாவின் புகழ்பெற்ற தபேலா மேஸ்ட்ரோ உஸ்தாத் ஜாகிர் ஹுசைன் (73) உடல்நலம் கவலைக்கிடமாக உள்ளது. அவர் விரைவில் மீண்டு வர பலரும் பிரார்த்தனை செய்கின்றனர்.
இதயம் தொடர்பான பிரச்சினை காரணமாக அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஜாகிர் ஜாகிர் ஹுசைன் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது உடல்நிலை மோசமடைந்ததால் அவருக்கு ஐசியு-வில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் ஞாயிற்றுக்கிழமை இரவு அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் அவர் விரைவில் மீண்டு வரவேண்டும் என்று பிரார்த்திப்பதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
முன்னதாக ஜாகிர் ஹுசைன் காலமானதாக வெளியான தகவலுக்கு அவரது உறவினர் தனது எக்ஸ் பக்கத்தில் மறுப்பு தெரிவித்துள்ளார். அதில் ஜாகிர் ஹுசைன் தொடர்ந்து தீவிர சிகிச்சையில் இருப்பதாகவும் அவர் இறந்துவிட்டதாக பரவும் செய்திகளை உடனடியாக நீக்குமாறும் வேண்டும்கோள் விடுத்துள்ளார்.
I am Zakir Hussain nephew and he has not passed away. We ask for prayers for my Uncle's health. Can you please remove this misinformation. He is in a serious condition and we ask for all his fans around the world to pray for his health
புகழ்பெற்ற தபேலா கலைஞர் உஸ்தாத் அல்லா ரக்கா கானின் மகனாக பிறந்த ஜாகிர் ஹுசைன், தனது 7 வயதில் தபேலா வாசிக்க தொடங்கியவர். 12 வயதில் இந்தியா முழுக்க பயணித்து தபேலா வாசித்தார். தனது வாழ்நாள் முழுக்க இந்திய இசையுலகுக்கு பெரும் பங்களிப்பை செய்து உலக அளவில் புகழ்பெற்றார். இந்திய படங்கள் மட்டுமின்றி சர்வதேச அளவில் பல்வேறு திரைப்படங்களில் பணியாற்றி, உலகம் முழுவதும் இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.ஜாகிர் ஹுசைனுக்கு இந்திய அரசு பத்ம பூஷன், பத்மவிபூஷன், பத்மஸ்ரீ மற்றும் இசைத்துறையில் உயரிய விருதாக கருதப்படும் சங்கீத நாடக அகாடமி ஆகிய விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT