Published : 13 Dec 2024 04:00 PM
Last Updated : 13 Dec 2024 04:00 PM

லண்டன் இசைக்கல்லூரியின் கவுரவ தலைவராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்!

லண்டன்: லண்டனில் இயங்கி வரும் ‘Trinity Laban Conservatoire of Music and Dance’ இசைக் கல்லூரியின் கவுரவ தலைவராக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த 5 ஆண்டுகளுக்கு அவர் இந்த பொறுப்பில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “கவுரவத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் டிரினிட்டி லாபன் இசைக்கல்லூரியின் மாணவர்களுக்கு உத்வேகமாகவும், அவர்களின் கலை வளர்ச்சிக்கு உதவிகரமாகவும் இருப்பார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இசைக்கல்லூரியின் தலைவரும், பேராசிரியருமான ஆண்டனி கூறுகையில், “ஏ.ஆர்.ரஹ்மானின் தலைமையானது எங்கள் மாணவர்களின் இசை அனுபவங்களை விரிவுபடுத்துவதற்கும், கலையின் புதிய வடிவங்களை கற்றுக் கொள்வதற்கும் ஊக்கமளிக்கும் என நாங்கள் நம்புகிறோம்” என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஏ.ஆர்.ரஹ்மான் கூறுகையில், “மதிப்புமிக்க இந்த இசைக்கல்லூரியின் கவுரவத் தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொள்வது எனக்கு கிடைத்த கவுரவம். மிகப்பெரிய பாக்கியமாக கருதுகிறேன்.” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x