Published : 10 Dec 2024 11:31 AM
Last Updated : 10 Dec 2024 11:31 AM
தன்னைப் பற்றி அல்லு அர்ஜுன் கூறிய வார்த்தைகளால் நெகிழ்ச்சி அடைந்துள்ளார் அமிதாப் பச்சன்.
இந்தியளவில் ‘புஷ்பா 2’ திரைப்படம் மாபெரும் வசூல் சாதனை நிகழ்த்தி வருகிறது. இந்தியில் ‘புஷ்பா 2’ படத்தை விளம்பரப்படுத்த அளித்த பேட்டியொன்றில் அல்லு அர்ஜுனிடம், “பாலிவுட்டில் எந்த நடிகர் உங்களுக்கு உத்வேகம் அளிக்கக்கூடியவர்?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அல்லு அர்ஜுன், “கண்டிப்பாக அமிதாப் பச்சன் ஜி தான். அவருடைய திரையுலக வாழ்க்கை என்பது மிகவும் பெரியது. அவருடைய படங்கள் பார்த்து வளர்ந்துள்ளோம். நிறைய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார். நான் வயதானவுடன் அவரைப் போல் நடிக்க முடியுமா என்று தெரியவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பேட்டியை இப்போது அமிதாப் பச்சன் குறிப்பிட்டு பகிர்ந்தார்கள். அல்லு அர்ஜுனின் இந்தப் பேச்சு குறித்து அமிதாப் பச்சன் தனது எக்ஸ் தள பதிவில் “அல்லு அர்ஜுன் ஜி, உங்கள் அன்பான வார்த்தைகளால் மிகவும் நெகிழ்ந்தேன். நீங்கள் எனக்கு தகுதியானதை விட அதிகமாக கொடுக்கிறீர்கள். நாங்கள் எல்லோரும் உங்களது பணி மற்றும் திறமையின் மிகப்பெரிய ரசிகர்கள். நீங்கள் தொடர்ந்து எங்களை ஊக்கப்படுத்த வேண்டும். உங்கள் வெற்றிக்கு எனது பிரார்த்தனைகளும் வாழ்த்துகளும்” என்று தெரிவித்துள்ளார்.
Amitabh Bachchan ji is Biggest Inspiration.
~ #AlluArjun
SHAHENSHAH OF INDIAN FILM INDUSTRY
ANGRY YOUNG MAN
DON
ONE MAN INDUSTRY
Video Pushpa1 .. Bolly2Box #Pushpa2TheRule #RashmikaMandanna @SrBachchan Sir WILDFIRE
Love & Respect pic.twitter.com/lpQM5Vtw9X— EFAshok Mistry (@ashokmistry4545) December 7, 2024
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT