Published : 10 Dec 2024 03:14 AM
Last Updated : 10 Dec 2024 03:14 AM
‘முருகா' அசோக் குமார், அஜய், சோனியா, மாறன் உட்பட பலர் நடிக்கும் படம், ‘சதுரங்க ஆட்டம் ஆரம்பம்’. டேனியல் ஜே வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு பாலசுப்ரமணியம் இசை அமைக்கிறார். எம்.வி.ராமச்சந்திரன் இயக்குகிறார். வி.வி.எஸ். சுப்ரீம் பிலிம்ஸ் சார்பில் வினோத் வி சர்மா தயாரிக்கும் இந்தப் படத்தின் தொடக்க விழா சென்னையில் நடந்தது. இயக்குநர் பேரரசு, இயக்குநரும் நடிகருமான ஆர்.அரவிந்தராஜ், நடிகர் சக்திகுமார், இயக்குநர் பாரதி கணேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இயக்குநர் பேரரசு பேசும்போது, ‘இன்றைக்கு ஓப்பனிங் என்பது நான்கைந்து ஹீரோக்களுக்கு மட்டும்தான் இருக்கிறது. மற்றபடி என்ன தான் பெரிய பட்ஜெட்டில் படம் எடுத்தாலும் மக்களுக்கு பிடித்திருந்தால்தான் வெற்றி அடைகிறது. என் முதல் படத்தில் நடிகர் விஜய்யிடம் கதை சொன்னபோது, மூன்றாவது முறைதான் அவர் ஓகே என்று சொன்னார். அப்படிச் சொன்னதும்தான் எனக்கு பயம் வந்தது. நான் அறிமுக இயக்குநர். அவர் மாஸ் ஹீரோ. கதையை நம்பி படத்தை நம்மிடம் ஒப்படைத்து இருக்கிறார் என்று பயம் ஏற்பட்டது. படம் முடிந்து விஜய் சார் பார்த்துவிட்டு, கதை சொன்னதை விட 3 மடங்கு நன்றாகவே எடுத்திருக்கிறீர்கள் என்றார். அப்போதுதான் எனக்குத் திருப்தி வந்தது. முன்பு விமர்சனங்களைப் பார்த்துவிட்டு மக்கள் படத்துக்கு சென்றார்கள். இப்போது மக்களே விமர்சகர்கள் ஆகிவிட்டார்கள். மக்களுக்குப் பயந்து நாம் படம் எடுக்க வேண்டும்” என்றார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT