Published : 06 Dec 2024 11:22 PM
Last Updated : 06 Dec 2024 11:22 PM
இயக்குநர் மற்றும் நடிகர் சசிகுமார், நடிகை சிம்ரன் ஆகியோர் பிரதான பாத்திரங்களாக நடித்து வரும் ‘டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி உள்ளது.
சுமார் 03.52 நிமிடங்கள் ரன் டைம் கொண்ட இந்த டீசரில் கணவன், மனைவியாக நடித்துள்ள சசிகுமார் மற்றும் சிம்ரனும் தங்களது இரண்டு மகன்களுடன் குடும்பத்தோடு ஊரை விட்டு ஓடும் முடிவில் உள்ளனர். அதற்கான காரணம் சொல்லப்படவில்லை. இந்த படத்தின் வசனங்கள் இலங்கை தமிழ் பேச்சு வழக்கில் எழுதப்பட்டுள்ளது.
இந்தப் படத்தை மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் மற்றும் எம்ஆர்பி எண்டெர்டைன்மென்ட் இணைந்து தயாரிக்கிறது. சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், எம்.எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக், பக்ஸ், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர்.
படத்தை அபிஷன்ஜீவிந்த் எழுதி, இயக்கி வருகிறார். ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கின. >>டீசர் வீடியோ லிங்க்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT