Published : 03 Dec 2024 07:04 AM
Last Updated : 03 Dec 2024 07:04 AM

‘இன்னும் குணமாகவில்லை' - ரகுல் பிரீத் சிங் வருத்தம்

நடிகை ரகுல் பிரீத் சிங், கடந்த அக்டோபர் மாதம் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது, பலத்த காயமடைந்தார். படுத்த படுக்கையான அவர் தொடர்ந்து ஓய்வு எடுத்து வருகிறார். தனது உடல் நிலை குறித்து, அவர் கூறும்போது, “அக்.5-ல் உடற்பயிற்சியின் போது 80 கிலோ எடையை தூக்கினேன். அப்போது என் முதுகெலும்பின் அடிப்பகுதியில் வலி ஏற்பட்டது. பிறகு படப் பிடிப்புக்குச் சென்றுவிட்டேன். பின் வலி தீவிரமானது. என் கீழுடல் மேலுடலில் இருந்து பிரிவது போல் உணர்ந்தேன். இதுபோன்ற காயங்கள் குணமாக 6 முதல் 8 வாரங்கள் ஆகும் இப்போது 6-வது வாரத்தில் இருக்கிறேன். இன்னும் 2 வாரங்களில் முழுமையாக குணமடைவேன்” என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x