Published : 25 Nov 2024 02:52 PM
Last Updated : 25 Nov 2024 02:52 PM
தென்னிந்திய படங்களுக்கு அதிக வரவேற்பு இருப்பது ஏன்? என்று தமன்னா அளித்துள்ள பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
சமீபமாக தென்னிந்திய படங்களுக்கு இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. இதற்கான காரணம் குறித்து தமன்னா அளித்த பேட்டியொன்றில், “தென்னிந்திய திரைப்படங்கள் அவற்றின் புவியியல் நிலப்பரப்பு பற்றி அதிகம் பேசுகின்றன, மேலும் அவற்றின் கதைகள் அதன் வேர்களை அடிப்படையாக கொண்டுள்ளன. அதனால்தான் அவர்களின் கதைகள் உலகளவில் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.
தென்னிந்திய சினிமா அடிப்படையில் மனித உணர்வுகளை பேசுகிறது. தாய், தந்தை... சகோதரன், சகோதரிக்காக பழிவாங்கும் கதைகள்... போன்ற கதை சொல்லல் வடிவங்கள் மூலம் அடிப்படை மனித உணர்வுகளைப் பற்றி இன்னும் பல கதைகளைச் சொல்ல முனைகின்றன. அவர்கள் வெவ்வேறு வகையான மக்களுக்கு படத்தை கொடுக்க முயற்சிக்கவில்லை. தங்களுக்குத் தெரிந்ததை மட்டுமே சொல்ல முயல்கிறார்கள். இதுதான் தெற்கில் கைகொடுக்கிறது என்று நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார் தமன்னா.
தமிழில் சுந்தர்.சி இயக்கத்தில் தமன்னா நடிப்பில் வெளியான ‘அரண்மனை 4’ படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து தமிழில் மீண்டும் தமன்னாவை நடிக்க வைக்க பல்வேறு நடிகர்கள் முயற்சித்து வருகிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT