Published : 09 Nov 2024 04:01 PM
Last Updated : 09 Nov 2024 04:01 PM
மும்பை: “உதவி இயக்குநர்களுக்கு தகுதியான ஊதியம் கிடைக்காதது வேதனையளிக்கிறது.” என்று சாய் பல்லவி தெரிவித்துள்ளார்.
மும்பையில் ‘அமரன்’ படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது. அதில் தென்னிந்திய மற்றும் பாலிவுட் படங்களுக்கான வித்தியாசம் குறித்த கேள்விக்கு நடிகை சாய் பல்லவி பதிலளித்தார். அதில் உதவி இயக்குநர்களுக்கான சம்பளம் குறித்தும் பேசினார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “பாலிவுட் அளவுக்கு அதிக ஊதியம் பெறாத ஏராளமான உதவி இயக்குநர்கள் நம்மிடம் இருந்தனர், இப்போது உள்ளனர்.
அதனால்தான் இங்கு, ஒருவர் உதவி இயக்குநராக இருந்தால், அவர்கள் அடுத்த படத்துக்கும் வருகின்றனர். காரணம் அது மிகவும் நல்லதாகவும் பாதுகாப்பானதாகவும் இருக்கும். ஆனால் தென்னிந்தியாவில், அவர்களுக்கு தகுதியான ஊதியம் வழங்கப்படுகிறதா என்று எனக்கு தெரியவில்லை. எனவே, அவர்கள் கடின உழைப்பாளிகளாகவும், திறமையாளர்களாகவும் இருந்தும், அவர்களுக்கு தகுதியான ஊதியம் கிடைக்காதது வேதனையளிக்கிறது.” என்று தெரிவித்துள்ளார் சாய் பல்லவி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT