Published : 07 Nov 2024 11:57 AM
Last Updated : 07 Nov 2024 11:57 AM

கமல்ஹாசன், மணிரத்னத்தின் ‘தக் லைஃப்’ டீசர் எப்படி? - கவனம் ஈர்க்கும் மேக்கிங்

சென்னை: நடிகர் கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு இன்று (நவ.7) ‘தக் லைஃப்’ டீசரை வெளியிட்டுள்ளது படக்குழு. இந்தப் படம் இயக்குநர் மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் காம்போவில் நாயகனுக்கு பிறகு உருவாகும் படமாக அமைந்துள்ளது.

சிம்பு, த்ரிஷா, அபிராமி, கவுதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி உட்பட பலர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். இதில் கமல்ஹாசன் 3 வேடங்களில் நடிக்கிறார். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கின்றன.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முடிந்தது. இதனையடுத்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு இன்று டீசரை வெளியிட்டுள்ளது.

சுமார் 44 நொடிகள் ரன்டைம் கொண்ட இந்த வீடியோவில் படத்தின் மேக்கிங் கவனம் ஈர்க்கிறது. இசை, காட்சி அமைப்பு, ஒளிப்பதிவு, ஸ்டன்ட் போன்றவை இதில் இடம்பெற்றுள்ளன. படத்தில் பலர் நடித்திருந்தாலும் கமல்ஹாசன் மற்றும் சிம்பு ஆகியோர் டீசரில் இடம்பெறுள்ள ஷாட்களில் வருகின்றனர். இதில் கமல்ஹாசன் இரண்டு கெட்-அப்பில் வருகிறார். அடுத்த ஆண்டு ஜூன் 5-ம் தேதி படம் வெளியாகும் என்ற அறிவிப்பும் இதில் இடம்பெற்றுள்ளது. டீசர் வீடியோ…

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x