Last Updated : 25 Oct, 2024 01:25 PM

 

Published : 25 Oct 2024 01:25 PM
Last Updated : 25 Oct 2024 01:25 PM

ரூ.2,000 கோடி வசூல் செய்யுமா ‘கங்குவா’? - சூர்யா பதில்

ரூ.2,000 கோடி வசூலிக்குமா ‘கங்குவா’ திரைப்படம் என்ற கேள்விக்கு நடிகர் சூர்யா பதிலளித்துள்ளார். சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘கங்குவா’. இப்படம் பல்வேறு மொழிகளில் நவம்பர் 14-ம் தேதி வெளியாகவுள்ளது. ஞானவேல்ராஜா தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார்.

டெல்லி மற்றும் மும்பை விளம்பர நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு, நேற்று (அக்.24) ஹைதராபாத்தில் விளம்பர பணிகளைத் தொடங்கியிருக்கிறார் சூர்யா. ‘கங்குவா’ பத்திரிகையாளர் சந்திப்பில் சூர்யாவிடம் “கோலிவுட்டில் இருந்து ரூ.2,000 கோடி வசூலிக்கும் முதல் படமாக ’கங்குவா’ இருக்கும் என ஞானவேல்ராஜா கூறியிருக்கிறார். இதை எப்படி பார்க்கிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த நடிகர் சூர்யா, “பெரிய கனவு கண்டால் என்ன குற்றம்? நான் அவரது வெளிப்பாட்டை நம்புகிறேன். அது நடந்து அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கட்டும்.” என்று பதிலளித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x