“சகோதரன் கிடைத்துள்ளார்” - கார்த்திக் சுப்பராஜ் குறித்து நடிகர் சூர்யா நெகிழ்ச்சி!

“சகோதரன் கிடைத்துள்ளார்” - கார்த்திக் சுப்பராஜ் குறித்து நடிகர் சூர்யா நெகிழ்ச்சி!

Published on

சென்னை: கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘சூர்யா 44’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இது தொடர்பான பதிவில், நடிகர் சூர்யா, கார்த்திக் சுப்பராஜை சகோதரன் என கூறி நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நடிகர் சூர்யா தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு: “சிறப்பாகவும், மகிழ்ச்சியாகவும் பல இடங்களில் படப்பிடிப்பு நடந்து முடிந்தது. திறமையான நடிகர்கள், படக்குழுவினருடன் நிறைய மறக்க முடியாத நினைவுகள் கிடைத்தன. இந்த வாழ்க்கைக்கு எனக்கு கார்த்திக் சுப்பராஜ் என்ற சகோதரன் கிடைத்துள்ளார். மறக்க முடியாத அனுபவத்தை ஏற்படுத்திக் கொடுத்த படக்குழுவினருக்கு நன்றி” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

‘கங்குவா’ படத்தினைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார் சூர்யா. 2டி நிறுவனம் மற்றும் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து இதனை தயாரித்து வருகிறது. பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட பலர் படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு இன்னும் பெயரிடப்படாமல் ‘சூர்யா 44’ என அழைக்கப்பட்டு வருகிறது. படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு படம் திரைக்கு வரும் எனத் தெரிகிறது. நவம்பர் மாதம் சூர்யாவின் ‘கங்குவா’ திரைபடம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in