Published : 07 Oct 2024 07:31 AM
Last Updated : 07 Oct 2024 07:31 AM

ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து

பிரபல நடன இயக்குநர், ஷேக் ஜானி பாஷா என்ற ஜானி மாஸ்டர், தமிழில் அரபிக்குத்து, ரஞ்சிதமே, காவாலா உள்ளிட்ட பல ஹிட் பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ளார். தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் சதீஷ் கிருஷ்ணனுடன் இணைந்து இவர் நடனம் அமைத்த ‘மேகம் கருக்காதா’ பாடலுக்குத் தேசிய விருது அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஜானி மாஸ்டர் குழுவில் இடம்பெற்றிருந்த 21 வயது பெண் நடன கலைஞர் ஒருவர், தன்னை பல வருடமாக அவர் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக ஹைதராபாத் ராய்துர்கம் போலீஸில் புகார் கூறியிருந்தார். வழக்குப் பதிவு செய்த போலீஸார் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இதற்கிடையே, தேசிய விருது வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக, ஹைதராபாத் ரங்காரெட்டி மாவட்ட நீதிமன்றம், அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. ஆனால், அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் தீவிரம் காரணமாக அவருக்கு அறிவிக்கப்பட்ட விருது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் விழா அழைப்பிதழ் திரும்பப் பெறப்படுவதாகவும் மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x