Last Updated : 19 Sep, 2024 11:53 AM

1  

Published : 19 Sep 2024 11:53 AM
Last Updated : 19 Sep 2024 11:53 AM

பிரியங்கா – மணிமேகலை இடையே நடந்தது என்ன? – குரேஷி விளக்கம்

சென்னை: பிரியங்கா மற்றும் மணிமேகலை இடையே நடந்த பிரச்சினை என்னவென்று குரேஷி வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார்.

‘குக் வித் கோமாளி’ சீசன் 5 நிகழ்ச்சியின் தொகுப்பாளர் இருந்தவர் மணிமேகலை. அந்த சீசனில் குக்காக வந்து கலந்துக் கொண்ட தொகுப்பாளர் பிரியங்காவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பதவியிலிருந்து விலகினார். இதனைத் தொடர்ந்து வீடியோ பதிவொன்றையும் வெளியிட்டார். இந்த வீடியோ பெரும் வைரலானது. இதை வைத்து பலரும் பிரியங்காவை கடுமையாக சாடினார்கள். ஆனால், விஜய் தொலைக்காட்சியோ, பிரியங்காவோ இது தொடர்பாக எந்தவொரு கருத்துமே தெரிவிக்காமல் இருக்கிறார்கள். இதனிடையே ‘குக் வித் கோமாளி’ சீசன் 5 நிகழ்ச்சியில் கோமாளியாக பிரபலமான குரேஷி, மணிமேகலை – பிரியங்கா இடையே நடந்தது என்ன என்பதை பேசியிருக்கிறார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: “குக் வித் கோமாளி’ சீசன் 5 முழுவதும் பிரியங்கா எனக்கு உறுதுணையாக இருந்தார் என திவ்யா துரைசாமி பேசினார். அவர் முடித்தவுடன், பிரியங்கா திவ்யா துரைசாமியை பற்றி நான் சில வார்த்தைகள் பேசலாமா என்று தொகுப்பாளர்களை பார்த்துக் கேட்டார். உடனே ரக்‌ஷன் ‘ஒகே அக்கா’ என்றார். மணிமேகலை எதுவுமே சொல்லவில்லை, பார்த்துக் கொண்டே இருந்தார். பிரியங்கா பேசிக் கொண்டிருக்கும் போதே மணிமேகலை குறுக்கிட்டு ‘இல்லை நீங்கள் பேச வேண்டாம். வெளியே நீங்க தான் தொகுப்பாளர் என்று பேசிக் கொள்கிறார்கள். அதனால் வேண்டாம்’ என்று சொன்னார்.

அனைவரும் குடும்பமாக ஒரு நிகழ்ச்சி செய்துக் கொண்டிருக்கும் போது, இப்படி சொல்கிறாரே என்று பிரியங்கா அதிர்ச்சியாகி விட்டார். என்னை பற்றி திவ்யா பேசியதால் தானே பேசினேன் என்று பிரியங்கா கூற, வேண்டாம் என்று மணிமேகலை மறுத்துவிட்டார். உடனே பிரியங்கா மனவேதனையுடன் வெளியே சென்றுவிட்டார். அடுத்த படப்பிடிப்பில் பிரியங்கா வந்தவுடன் போன படப்பிடிப்பில் சில விஷயங்கள் நடந்தது அதற்கு வருத்தம் தெரிவித்தால் நன்றாக இருக்கும் என்று மணிமேகலையிடம் சொன்னார்.

முன்னதாக குழுவினரிடமும் திவ்யா பேசியதால் நான் பேச வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதனால் நாம் இந்த படப்பிடிப்பில் அதை பேசிவிட்டு தொடங்கிவிடலாம் என்று சொல்லியிருக்கிறார். ஆனால் நான் அங்கு இருந்தவரை மணிமேகலை மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று குழுவினரோ, பிரியங்காவோ சொல்லவில்லை. மணிமேகலை சுயமரியாதை என்ற விஷயத்தை கொண்டு வருகிறார். நான் உட்பட அனைவருக்குமே சுயமரியாதை இருக்கிறது.

அனைவருமே அவர்களுடைய திறமை மூலமாகவே வளர்ந்து வருகிறோம். பிரியங்கா பல ஆண்டுகளாக தொகுப்பாளராக இருக்கிறார். அதற்காக அவருக்கு மரியாதை அளிக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லவில்லை. அந்தச் சமயத்தில் பேச விடாமல் இருந்தது தவறு, ஒரு வேளை பேச அனுமதிவிட்டு, பின்பு தூக்கிவிடுங்கள் என்று சொல்லியிருக்கலாம். மணிமேகலை ‘நான் குழுவினரிடம் சொல்லிவிட்டேன், அவர்கள் கேட்கவில்லை’ என்று சொல்லியிருக்கிறார். ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் பணிபுரியும் போது, பிரியங்காவை தனியாக அழைத்து சொல்லியிருக்கலாம், ஏனென்றால் இருவருமே நண்பர்கள் தான்.

அப்படி பேசியிருந்தால் பிரியங்கா அமைதியாக பேசியிருப்பாரோ என நினைக்கிறேன். அது மணிமேகலை தரப்பில் இருந்து பண்ணியிருக்கலாம் என தோன்றுகிறது. இந்தப் பிரச்சினை மீண்டும் பேசப்பட்ட போது, ‘பிச்சை எடுத்தாலும் பரவாயில்லை நான் வருத்தம் தெரிவிக்கமாட்டேன்’ என்று சொல்லிவிட்டு மணிமேகலை கேரவேனுக்கு சென்றுவிட்டார். சுமார் இரண்டரை மணி நேரம் படப்பிடிப்பே நடக்கவில்லை. அன்று வந்த விருந்தினர்கள் கூட இங்கு ஜாலியாக இருக்கலாம் என்று வந்தால் என்னப்பா இப்படி சண்டை நடக்குது என்றார்கள். உண்மையில் இது தான் நடந்தது” இவ்வாறு குரேஷி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x