Last Updated : 17 Sep, 2024 09:14 PM

 

Published : 17 Sep 2024 09:14 PM
Last Updated : 17 Sep 2024 09:14 PM

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ பொங்கல் ரிலீஸ் உறுதி - எழும் புதிய குழப்பம்

சென்னை: அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படக்குழு மீண்டும் பொங்கல் வெளியீட்டை உறுதி செய்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

லைகா நிறுவனம் தயாரிப்பில் ’விடாமுயற்சி’ மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ‘குட் பேட் அக்லி’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் அஜித். இதில் ’விடாமுயற்சி’ படத்தில் ஒரே ஒரு பாடல் படப்பிடிப்பு மட்டுமே பாக்கியிருக்கிறது. ‘குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் இருக்கிறது. ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பில் ஏற்பட்ட பல்வேறு சிக்கலினால் இன்னும் படப்பிடிப்பு முடிவு பெறாமல் உள்ளது. இதனால் வெளியீட்டு தேதியினை இன்னும் படக்குழு அறிவிக்கவில்லை. ஆனால், டிசம்பர் வெளியீடு என்று விநியோகஸ்தர்களிடம் தெரிவித்திருக்கிறார்கள். இதனிடையே, ‘குட் பேட் அக்லி’ படம் அறிவிக்கப்பட்ட போதே பொங்கலுக்கு வெளியீடு என்பதில் உறுதியாக உள்ளது.

‘விடாமுயற்சி’ டிசம்பர் வெளியீடு என்றால் பொங்கலுக்கு ‘குட் பேட் அக்லி’ வெளியாக வாய்ப்பில்லை. மே 1-ம் தேதி அஜித்தின் பிறந்த நாளன்று வெளியிடுவார்கள் என்று கூறப்பட்டது. ஆனால், இன்று (செப் 17) ‘குட் பேட் அக்லி’ இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு பிறந்த நாள். அதற்காக படக்குழு வெளியிட்ட போஸ்டரில் பொங்கல் வெளியீட்டை உறுதி செய்திருக்கிறது. இது விநியோகஸ்தர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இரண்டு மாதம், இரண்டு அஜித் படங்கள் வெளியிட சாத்தியமில்லை என்பதால் என்ன நடக்கப் போகிறது என்பது விரைவில் தெரியவரும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x