Published : 20 Aug 2024 08:16 AM
Last Updated : 20 Aug 2024 08:16 AM
இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன், சென்னையில் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தி வருகிறது. இந்த வருடத்துக்கான, 22-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா, டிச. 12 முதல் 19-ம் தேதி வரை நடக்கிறது.
இதில், போட்டிப் பிரிவில் 12 தமிழ்ப் படங்களும் பல்வேறு இந்திய மொழிகளிலிருந்து 12 முதல் 15 படங்களும் உலக சினிமா போட்டிப் பிரிவில் 10 படங்களும் போட்டியில்லாத பிரிவில் கேன்ஸ், பெர்லின், வெனிஸ் உள்ளிட்ட சர்வதேச விழாக்களில் பங்கேற்ற படங்களும் திரையிடப்பட இருக்கின்றன.
போட்டிப் பிரிவுக்கான தமிழ்ப் படங்களை https://filmfreeway.com/chennaiintlfilmfest என்ற இணையதளம் மூலம் அனுப்ப வேண்டும். 2023-ம் ஆண்டு அக்.16 முதல் இந்த வருடம் அக்.15 வரை சென்சார் செய்யப்பட்ட படங்களுக்கு நுழைவுக் கட்டணம் இல்லை. சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் நவ.2. இதில் பங்கேற்பதற்கான நுழைவு சீட்டுகளை ஆன்லைனில் பதிவு செய்து பெறவேண்டும்.
மாணவர்களுக்கான கட்டணம் ரூ.500. சினிமா தொழில்நுட்ப கலைஞர்களுக்கு ரூ.300. பொது நுழைவு சீட்டு ரூ.1000 என வகைப்படுத்தப்பட்டுள்ளது என்று இந்த திரைப்பட விழாவின் இயக்குநர் ஏவி.எம்.கே. சண்முகம் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT